அடேங்கப்பா! Microsoft சர்பேஸ் ஹப் 2S இவ்வளவு விலையா? மெர்சல் காட்டும் புதிய சாதனம்!

|

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆல் இன் ஒன் கோலாப்ரேட்டிவ் சாதனமான, சர்பேஸ் ஹப் 2S என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சாதனத்தின் அறிமுகத்தின் ஒரு பகுதியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இதன் இந்தியா விலை, விபரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பையே தகவல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இதன் விலையைக் கேட்டால் நிச்சயம் உங்களுக்கே தலைச் சுற்றும்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S டிஜிட்டல் வைட்போர்டு

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S டிஜிட்டல் வைட்போர்டு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த புதிய சர்பேஸ் ஹப் 2S டிஜிட்டல் வைட்போர்டு, சந்திப்பு தளம் மற்றும் இன்னும் பல சேவைகளுக்காக நிறுவனங்களில் இதைப் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாதனத்தை இந்தியச் சந்தையில் சர்பேஸ் ஹப் 2 கேமரா மற்றும் சர்பேஸ் ஹப் 2 பென்(Pen) ஆகிய கருவிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, நிறுவனம் ஹப் 2S சாதனத்திற்கான "ஸ்டீல்கேஸ் ரோம்" மொபைல் ஸ்டாண்டையும் அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S மென்பொருள் விபரம்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S மென்பொருள் விபரம்

மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் ஹப் 2S வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நேரடியாக அங்கீகரிக்கப்பட்ட ஹப் மறுவிற்பனையாளர்களை தொடர்பு கொள்ளலாம். மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S அனைத்து மைக்ரோசாஃப்ட் சேவைகளின் அனைத்து விதமான மென்பொருள் மற்றும் மற்ற நிறுவனங்களின் மென்பொருளையும் கொண்டுள்ளது. விண்டோஸ் 10, டீம்ஸ், மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365, மைக்ரோசாப்ட் வைட்போர்டு மற்றும் பல சேவைகள் இதில் உள்ளது.

டிசைன் விபரம்

டிசைன் விபரம்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S சாதனம் 50 சதவீதத்திற்கும் அதிகமான வேகமான கிராபிக்ஸ் மற்றும் 30 சதவீதம் மேம்பட்ட அதீத செயல்திறனைக் கொண்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த புதிய பதிப்பு முந்தைய சர்பேஸ் மடலை விட மெலிதானது மற்றும் அசல் மேற்பரப்பு மையத்தை விட 40 சதவீதம் இலகுவானது என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S டிஸ்ப்ளே

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S டிஸ்ப்ளே

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S டிஸ்ப்ளே பற்றிக் கூறுகையில், இது ​​60 ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் பேனலுடன் 50 அங்குல பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளேயுடன் கூடிய 3,840 × 2,560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. அதேபோல், 10 பிட் வண்ணம், பாதுகாப்பிற்கான கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் 10 பாயிண்ட் மல்டி மல்டி-டச் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் விண்டோஸ் 10 இன் 8 வது ஜென் இன்டெல் கோர் i5 செயலி மற்றும் ஒருங்கிணைந்த இன்டெல் யுஎச்.டி கிராபிக்ஸ் 620 உடன் இயங்குகிறது.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S போர்ட் விபரம்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S போர்ட் விபரம்

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S, 8 ஜிபி டிடிஆர் 4 ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்.எஸ்.டி உடன் வருகிறது. அதேபோல், 8 எலேமன்ட் MEMS மைக்ரோஃபோன் உடன் 3 வழி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது. போர்ட் விபரங்களைப் பொறுத்தவரையில், ​​யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட், 1 யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் RJ45 உடன் கூடிய கிகாபிட் ஈதர்நெட்டுடன் போர்ட் ஆகியவற்றுடன் வருகிறது. இத்துடன் 1 HDMI வீடியோ உள்ளீட்டு போர்ட் மற்றும் மினி-டிஸ்ப்ளே போர்ட் வீடியோ வெளியீடு ஆகியவை அடங்கும்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S விலை

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S விலை

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியச் சந்தையில் வெளியிட்டுள்ள இந்த புதிய சாதனத்தின் விலையைக் கேட்டாள் நிச்சயம் உங்களுக்கு அடேங்கப்பா என்று தான் இருக்கும், மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப் 2S சாதனத்தின் இந்திய விலை ரூ .11,89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஹப் 2S சாதனத்திற்கான "ஸ்டீல்கேஸ் ரோம்" மொபைல் ஸ்டாண்ட் ரூ.1,17,500 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Microsoft Surface Hub 2S Launched In India Know The Price Specification And Features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X