Home
Gadgets

LED டிஸ்பிளே.. தரமான ஸ்டீரியோ Earbuds.. முழு டச் கண்ட்ரோல்.. JBL-க்கு போட்டியாக Microdigit டிவைஸ்.. என்ன விலை?

மைக்ரோடிஜிட் (Microdigit) நிறுவனம் இந்தியாவில் புதிதாக மைக்ரோடிஜிட் DEP386 வயர்லெஸ் இயர்பட்ஸ் (Microdigit DEP386 wireless earbuds) சாதனம் என்ற ஒரு TWS இயர்பட்ஸ் (Earbuds) டிவைஸையும், மைக்ரோடிஜிட் MDE480 வயர்லெஸ் நெக்பேண்ட் (Microdigit MDE480 wireless neckband) என்ற மற்றொரு சாதனத்தையும் சேர்த்து ஒரே நாளில் அறிமுகம் செய்துள்ளது. இதில் மைக்ரோடிஜிட் DEP386 வயர்லெஸ் இயர்பட்ஸ் (Microdigit DEP386 wireless earbuds) சாதனம், ஹைடெக்கான LED டச் டிஸ்பிளே சார்ஜிங்-கேஸ் (Touch display charging case) உடன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இந்த சாதனம் பற்றிய முழு விபரத்தை பார்க்கலாம்.

மைக்ரோடிஜிட் (Microdigit) நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள புதிய மைக்ரோடிஜிட் DEP386 வயர்லெஸ் இயர்பட்ஸ் (Microdigit DEP386 wireless earbuds) சாதனம் போல, கடந்த வாரம் ஜேபிஎல் நிறுவனமும் ஒரு டச் டிஸ்பிளே கொண்ட TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை JBL நிறுவனம் ஜேபிஎல் லைவ் பீம் 3 (JBL Live Beam 3) என்ற பெயருடன் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LED டிஸ்பிளே.. தரமான ஸ்டீரியோ Earbuds.. முழு டச் கண்ட்ரோல்..

மைக்ரோடிஜிட் DEP386 வயர்லெஸ் இயர்பட்ஸ் (Microdigit DEP386 wireless earbuds):

புதிய மைக்ரோடிஜிட் DEP386 வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் ஸ்டீரியோ சவுண்ட் (stereo sound) ஆதரவு, குயிக் பேரிங் (Quick Paring), ஈஸி கனெக்டிவிட்டி மியூசிக் மற்றும் வாய்ஸ் கால்ஸ் (easy connectivity for music and voice calls), வாய்ஸ் அசிஸ்டன்ட் (voice assistant) ஆதரவு, எல்இடி டச் கண்ட்ரோல் டிஸ்பிளே சார்ஜிங் கேஸ் (LED touch control display charging case) போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

மைக்ரோடிஜிட் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய Microdigit DEP386 wireless earbuds டிவைஸ் ஆட்டோமேட்டிக் பவர் ஆன் (Automatic Power ON) மற்றும் பவர் ஆஃப் (Automatic Power OFF) அம்சங்களை கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனத்தின் சார்ஜிங் கேஸில்லிருந்து அதன் இயர்பட்ஸ்களை நீங்கள் வெளியில் எடுத்தவுடன் சாதனம் தானாக ஆன் (ON) ஆக்கிக்கொள்கிறது. அதேபோல், இயர்பட்ஸ்களை மீண்டும் சார்ஜிங் கேஸிற்குள் வைக்கும் பொழுது தானாக ஆஃப் (OFF) ஆகிவிடுகிறது.

இந்த சாதனம் சிம்பிள் டச் கெஷ்டர் மூலம் மியூசிக் மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. பாடல்களை பிளே மற்றும் பாஸ் செய்ய சிங்கள் டச், பாடல் டிராக்குகளை மாற்ற ட்ரிபிள் கிளிக் டச், மற்றும் வால்யூம் லெவலை அட்ஜஸ்ட் செய்ய டபுள் கிளிக் என்று பல டச் கண்ட்ரோல் ஆதரவை இந்த மைக்ரோடிஜிட் DEP386 வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LED டச் டிஸ்பிளேவுடன் மைக்ரோடிஜிட் DEP386 வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை (Microdigit DEP386 wireless earbuds Price):

இந்த புதிய மைக்ரோடிஜிட் DEP386 வயர்லெஸ் இயர்பட்ஸ் (Microdigit DEP386 wireless earbuds) சாதனம் இந்தியாவில் ரூ. 1999 என்ற அறிமுக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த LED டச் டிஸ்பிளே இயர்பட்ஸ் சாதனம் (LED Touch Display Earbuds) சாதனம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சில்லறை கடைகள் வழியாக இன்று முதல் வாங்க கிடைக்குமென்று மைக்ரோடிஜிட் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Microdigit DEP386 Wireless Earbuds With LED Touch Display Charging Case Launched At Price Of Rs 1999 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X