Home
Gadgets

சியோமி 49-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மி எல்.இ.டி டிவி 4 ப்ரோவில் இருந்து, சியோமி மிஎல்.இ.டி டிவி 4 ஏ ப்ரோ முற்றிலும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.9 மில்லி மீட்டர் சுய விவரமும், உறுதியான பருமனும் கொண்டது.

இந்திய சந்தையில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், மேலும் இந்தியாவில் மிக அதிமாக சியோமி ஸ்மார்ட் டிவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி 49-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

தற்சமயம் சியோமி 49-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,அதன்படி இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.31,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உங்கள் பழைய டிவி மாடல்களை கொண்டு எக்சேஞ் செய்தால் ரூ.28,000-விலையில் மி டிவி 4ஏ ப்ரோ மாடலை வாங்க
முடியும்.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட், மி.காம் போன்ற தளங்களில் விலைகுறைக்கப்பட்ட சியோமி 49-இன்ச் மி டிவி 4ஏ ப்ரோ மாடலை வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேற அம்சங்களைப் பார்ப்போம்.

கண்டென்ட் டிஸ்கவரி

கண்டென்ட் டிஸ்கவரி

விற்பனைக்கு வந்துள்ள சியோமி மி எல்.இ.டி டிவி 4 ஏ ப்ரோ, மி -யின் தயாரிப்பு வரிசையில் பிரத்யேகமான வடிவமைப்பாகும். 49-இன்ச் வேரியண்டில் அகன்ற திரை விகிதங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட் டி.வியில், மேம்படுத்தப்பட்ட பேட்ச்வால் ஓ.எஸ் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.சியோமியின் தனித்துவமான கண்டென்ட் டிஸ்கவரி இன்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், 15க்கும் மேற்பட்ட சோர்ஸ்கள் மூலம், மணிக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

 பிரத்யேக வடிவமைப்பு

பிரத்யேக வடிவமைப்பு

மி எல்.இ.டி டிவி 4 ப்ரோவில் இருந்து, சியோமி மிஎல்.இ.டி டிவி 4 ஏ ப்ரோ முற்றிலும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.9 மில்லி மீட்டர் சுய விவரமும், உறுதியான பருமனும் கொண்டது. துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிவியில் நான்கு பக்கங்களிலும்
உள்ள பெசல்கள் கூட தெளிவாகப் புலப்படக்கூடியது. வெற்றுப்பூச்சுகளால் ஈர்ப்பதை தவிர்த்து முறையாக வடிவத்தை இறுதி செய்துள்ளனர். டிவி ஸ்டாண்டில் வைக்க முடியாதவர்கள் சுவரில் மாட்டிக் கொள்வதற்கான வசதிகளும் புறப்பகுதியில்
இணைக்கப்பட்டுள்ளது

காட்சித் தெளிவு

காட்சித் தெளிவு

கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாயில் ஐ.பி.எஸ் பேனல் உதவியுடன் வீடியோக்களை துல்லியமாக வண்ணங்களுடன் பார்க்க முடியும். பார்வையாளர்களின் அனுபவத்தை ஆழமாக்க கறுப்பு வண்ணம் மெருகேற்றப்பட்டுள்ளது. சியோமி மி எல்.இ.டி டிவி 4ஏ ப்ரோவில் தரமான வீடியோ கோப்புகளை பார்க்கும்போதும், விரைவான வைபையை இயக்கும் போதும் ஏமாற்றம் இருக்காது என்பது உத்தரவாதம். எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 1080 வீடியோ வெளியீட்டுத் திறனும் வண்ணச்சாரலையும், கண்ணியமான பொலிவையும் தருகிறது.

ஆடியோவில் தரம்

ஆடியோவில் தரம்

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் இதில் இல்லை என்பதுதான் குறைபாடு. மற்றபடி ஆடியோ தரத்தில் மற்ற ஸ்மார்ட் டிவிக்கள் மல்லுக்கு நிற்க முடியாத அளவுக்கு தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது டி.டி.எச் மற்றும் எச்.டி ஒலிபெருக்கி வசதிகளுடன் டி.வி இருக்கும் அறை அழகிய ஓசைகளால் நிரம்புகிறது.புளூடுத் ஸ்பீக்கர், சவுண்ட் பார் இல்லாமல் நல்ல ஒலிகளை கேட்க முடியும்.
14 வித்தியாசமான கண்டென்களில் மணிக்கு 7 ஆயிரம் இசையை உள்வாங்கிக் கொள்ளலாம். ஹாட் ஸ்டார், ஹங்கமா, சோனி லிவ்,வூட், ஈரோஸ் நவ், ஜீ5, ஜியோ சினிமா, ஹூக், எபிக் ஆன் சேவைகளை உள்ளடக்கியது.

 வரம்பற்ற வீடியோக்கள்

வரம்பற்ற வீடியோக்கள்

ஆண்ட்ராய்டு ஓரியோவில் நிறுவப்பட்டுள்ள யூ.ஐ தொழில்நுடப உதவியுடன் யூடியூப் உள்ளிட்ட ஸ்டீரிமிங் சேவைகளை பெற வசதி உள்ளது. வரம்பற்ற வீடியோ உள்ளடக்கங்களை பார்க்க அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டில் டிவி இயங்கும்போது அகன்ற திரையில் கூகிள் பிளே ஸ்டோர் மூலம் நல்ல ஆப்ஜெட்களை நிறுவ முடியும் பேட்ஜ்வால் வாடிக்கையாளர்களின் பார்க்கும் திறனை மேலும் செம்மைப்படுத்துகிறது. பேஸ்புக் அக்கவுண்ட்களை ஓபன் செய்து, ஸ்டீரிமிங் வீடியோக்களை பார்க்கும் வசதி இதில் சிறப்பு.

ரிமோட்டின்

ரிமோட்டின்

தனிததன்மை சியோமி மி டிவியின் முக்கியமான அம்சமாக அதன் ரிமோட் கண்ட்ரோல் ஆகும். 12 பட்டன்களை கொண்ட ரிமோட் கண்ட்ரோல் பேட்ஜ்வால் யு.ஐ யைக் கொண்டது. ப்ளூ டூத்தை வைத்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய டயல் மையத்தில் 4 திசை பொத்தான்களும், ஒரு நடவடிக்கை விசையும் உள்ளது. ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் பொத்தான், பேட்ஜ்வால் பொத்தான் தவிர குரல்வழி கட்டளைப் பொத்தானையும் உள்ளடக்கியது. யூடியூப் உள்ளிட்ட இதர சேவைகளை இதில் பெற முடியும்.

உள்ளடக்கத் திறன்

உள்ளடக்கத் திறன்

சியோமி மி எல்.இ.டி டிவி 4 ஏ புரோவில் அம்லோஜிக் குவாடு கோர் ஜிப் செட்டைக் கொண்டது. அதனுடன் மாலி 450 ஜிபியு இருக்கிறது. 2 ஜிபி ரேம், 8 ஜி.பி உள்ளடக்க நினைவகத்திறன் உள்ளது. பேஸ்புக்,எம்.எஸ் ஸ்டீரீம் வீடியோக்களை பிளே செய்து பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி போர்ட்கள் இதில் இருக்கின்றன. ஒரு ஈத்தர்நெட் போர்ட்டும், ஏவி
உள்ளீடும் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடுத், வைபை இணைப்பு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mi TV 4A Pro 49 Price in India Cut During Mi TV Anniversary Sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X