Home
Gadgets

முதல் முறையாக விற்பனைக்குக் களமிறங்கும் சியோமி மி டிவி 4A ப்ரோ ஸ்மார்ட் டிவி.! விலை மற்றும் விபரம்.!

சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி இந்தியச் சந்தையில், முதல் முறையாக இன்று 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலுடன் சியோமி மி டிவி 4A ப்ரோ என்ற 32' இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்திருந்தது. சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி இந்தியச் சந்தையில், முதல் முறையாக இன்று 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

மதியம் 12 மணிக்கு விற்பனை

மதியம் 12 மணிக்கு விற்பனை

சியோமி மி டிவி 4A ப்ரோ ஸ்மார்ட் டிவி சியோமி வலைத்தளமான Mi.com மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இன்று மதியம் 12 மணி அளவில் தனது விற்பனையைத் துவங்குகிறது. அதுமட்டுமின்றி சியோமி ஹோம் ஸ்டோர்ஸ் கடைகளிலும் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது.

இன் பில்ட் கூகுள் கிறோம்காஸ்ட்

இன் பில்ட் கூகுள் கிறோம்காஸ்ட்

புதிய சியோமி மி டிவி 4A ப்ரோ ஸ்மார்ட் டிவி இன் பில்ட் கூகுள் கிறோம்காஸ்ட மற்றும் கூகுள் பிளே ஆக்ஸஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டு தற்பொழுது விற்பனைக்குக் களமிறங்குகிறது. இந்த புதிய டிவி 7,00,000 மணிநேர உள்ளடக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கூகுள் அசிஸ்டன்ட் வாய்ஸ் கமெண்ட் உடன் கூடி ப்ளூடூத் பவர் மி ரிமோட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

சியோமி மி டிவி 4A ப்ரோ ஸ்மார்ட் டிவி

சியோமி மி டிவி 4A ப்ரோ ஸ்மார்ட் டிவி

புதிய சியோமி மி டிவி 4A ப்ரோ ஸ்மார்ட் டிவி இன்று வெறும் ரூ.12,999 என்ற விலையில் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் அதிகாரப்பூர்வ மி தளத்தில் விற்பனைக்கு வருகிறது. சியோமி ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களின் பேமெண்ட் விபரங்கள் மற்றும் முகவரி விபரங்களை முன்னரே பதிவு செய்து வைத்துக்கொண்டால் விரைவாக டிவிகளை புக் செய்துகொள்ளலாம் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோமி மி டிவி 4A ப்ரோ ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்:

சியோமி மி டிவி 4A ப்ரோ ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள்:

- 32' இன்ச் உடன் கூடிய 1366x768 பிக்சல் கொண்ட எச்.டி ரெடி டிஸ்பிளே

- 20 வாட்ஸ் ஸ்பீக்கர்
- பாட்ச்வால் யு.ஐ உடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 64 பிட் குவாட் கோர் அமலாஜிக் கோர்டேஸ் எ53 பிராசஸர்(64-bit quad-core Amlogic Cortex-A53 processor)
- 7 ஆம் ஜெனெரேஷன் இமேஜிங் என்ஜின்
- 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 2 யுஎஸ்பி போர்ட் 2.0
- 3 எச்.டி.எம்.ஐ போர்ட்
- ஈதர்நெட், இயர்போன் அவுட்
- வைஃபை 802.11 b/g/n
- பில்ட் இன் கிறோம்கேஸ்ட்
- கூகுள் அசிஸ்டன்ட்
- ப்ளூடூத் மி ரிமோட்

விலை: ரூ.12,999

Best Mobiles in India

English summary
Mi TV 4A Pro 32 to Go on Sale for the First Time in India Today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X