சியோமி ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: உடனே இதை முயற்சி செய்யுங்கள்.!
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், டிவி, ஸ்மார்ட்வாட்ச் உட்பட பல்வேறு பொருட்களுக்கு இந்தியா மற்றும் உலக நாடுகளிடையே அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாகச் சிறந்த தரம் மற்றும் குறைவான விலையில் இந்நிறுவனம் சாதனங்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது.

சியோமி மி டிவி 4ஏ ப்ரோ
சியோமி மி டிவி 4ஏ மாடல் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு இவற்றுக்கு மாற்றாக மி டிவி 4ஏ ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டன, எனினும் பழைய மாடல்களுக்கு சியோமி தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகிறது.

இதற்கென 50 பயனர்கள் தேர்வு
அந்த வகையில் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் மி டிவி 4ஏ மாடல்களுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது. இதற்காக முன்னோட்ட திட்டத்தை சியோமி தற்சமயம் துவங்கியுள்ளது, அதன்படி இதற்கென 50 பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு புதிய இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

கம்யூனிட்டி ஃபோரம்
குறிப்பாக புதிய இயங்குதளத்திற்கான முன்னோட்ட திட்டம் அந்நிறுவனத்தின் கம்யூனிட்டி ஃபோரம் என்ற பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இதல் பங்கேற்க பயனர்கள் சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் அல்லது 43-இன்ச் பயன்படுத்த வேண்டும். பின் அவர்கள் ஃபோர்ம் போஸ்ட் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் இதில் தேர்வு செய்யப்படுவோர் ஜீலை 20-ம் தேதி அறிவிக்க்படுவர்.

10லட்சத்திற்கும் அதிகமானோர்...
இந்த முதற்கட்ட சோதனைக்குப் பின் இயங்குதளத்துக்கான அப்டேட் கண்டிப்பாக அனைவருக்கும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி அறிவித்துள்ள தகவல்களின் படி சுமார் 10லட்சத்திற்கும் அதிகமானோர் மி டிவி 4ஏ மாதிரிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த புதிய மென்பொருள் அப்டேட் மூலம் மி டிவி 4ஏ மாடலில் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் பெறும்.

பில்ட்-இன் க்ரோம்காஸ்ட்
மேலும் புதிய இயங்குதளம் ஸ்மார்ட டிவியில் கூகுள் பிளே ஸ்டோர் ஆப் டவுன்லோடுகள், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், கூகுள் பிளே திரைப்படங்கள், கூகுள் பிளே மியூசிக் மற்;றும் மேம்பட்ட செயலிக்கான வசதி போன்ற பல்வேறு பலன்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications