ஜூன் 1: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் சியோமியின் Mi TV 4A 40 ஸ்மார்ட் டிவி.!

|

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட தரமான அம்சங்களுடன் சற்று குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது சியோமி. அண்மையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

சியோமி மி டிவி 4ஏ 40-இன்ச் ஸ்மார்ட் டிவி

சியோமி மி டிவி 4ஏ 40-இன்ச் ஸ்மார்ட் டிவி

எனவே ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு போட்டியாக சியோமி நிறுவனமும் விரைவில் தனது 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜூன் 1-ம் தேதி மி டிவி 4ஏ 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலைஅறிமுகம் செய்ய உள்ளது.

மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 32-இன்ச்  மற்றும் மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக

குறிப்பாக சியோமி நிறுவனத்தின் மி டிவி 4ஏ 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே,bezel-less டிசைன், சிறந்த ஆடியோ வசதி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு இந்நிறுவனம் அறிமுகம் செய்த மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 32-இன்ச் மற்றும் மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Redmi நோட் 8 2021 என்ற புதிய மாடல் 4 கேமராவுடன் அறிமுகமாகிறது தெரியுமா?Redmi நோட் 8 2021 என்ற புதிய மாடல் 4 கேமராவுடன் அறிமுகமாகிறது தெரியுமா?

மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 32-இன்ச்  மற்றும் மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்

மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 32-இன்ச் மற்றும் மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்

சியோமி மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, பின்பு 1368 x 768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1920 x 1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

ளுமே 95% ஸ்க்ரீன்

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளுமே 95% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகின்றன. மேலும் மி டிவி ஹாரிசன் எடிஷன் தொடர் ஸ்மார்ட் டிவிககள் ஆனது ஆழமான கான்ட்ராஸ்ட்டுகள் மற்றும் கலர் ரீப்ரொடெக்ஷனில் பின்பாயிண்ட் துல்லியம் போன்ற வசதிகளுடன் வெளிவந்துள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

னியுரிம விவிட் பிக்சர் என்ஜின்

மேலும் Mi-இன் தனியுரிம விவிட் பிக்சர் என்ஜின் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது Horizon Edition ஸ்மார்ட் டிவி மாடல்கள். பின்பு இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆனது ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் சொந்த ஸ்கின் ஆன பேட்ச்வால் UI கொண்டு இயங்குகிறது. இதன் பேட்ச்வால் ஆனது நெட்பிலிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற 23+ ஓடிடி கன்டென்ட் கூட்டாளர்களை ஒருங்கிணைத்து, மொத்தம் 16+ மொழிகளில் இருந்து கன்டென்ட்டை கொண்டு வருகிறது.

Horizon Edition ஸ்மார்ட் டிவிகள் கூகுள்

இந்த Horizon Edition ஸ்மார்ட் டிவிகள் கூகுள் அசிஸ்டென்ட், கூகுள் டேட்டா சேவர் தொழில்நுட்பம், க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இந்த புதிய சியோமி டிவிகளில் குவிக் வேக் அம்சமும் இடம்பெற்றுள்ளது, எனவே வெறும் 05 வினாடிகளில் உங்கள் டிவியை வேக் அப் செய்ய வைக்க முடியும்.

ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவிகள்

மி டிவி 4 ஏ ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவிகள் ஆனது ஒன்-க்ளிக் ப்ளே அம்சத்துடன் வருகிறது, இது பயனர்கள் ஒரே கிளிக்கில் லைவ் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க அனுமதிக்கிறது. பின்பு பேட்ச்வாலில் இருந்து நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்ட 7க்கும் அதிகமானலைவ் செய்தி சேனல்களிலிருந்தும் நீங்கள் செய்திகளைக் காணலாம் என்பது சிறப்பு.

டிஷன் ஸ்மார்ட் டிவிகள்

இந்த சியோமி ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவிகள் கோர்டெக்ஸ்-ஏ 53 ப்ராசஸர் மூலம் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன்
இயக்கப்படுகிறது. பின்பு டி.வி.எஸ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 20வாட் ஸ்பீக்கர்களும் இவற்றுள் உள்ளன.

இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள்,

மேலும் எச்டிஎம்ஐ போர்ட்கள்,இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், 3.5 மிமீ ஹெட்ஜாக், ப்ளூடூத் 4.2 மற்றும் வைஃபை 802.11 பி / ஜி / என் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன மி டிவி 4 ஏ ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவிகள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mi TV 4A 40 with Full HD display Launching in India on June 1: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X