பட்ஜெட் விலையில் Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

சியோமி நிறுவனம் Mi True Wireless Earphones 2C என்ற புதிய சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்ஸ் சாதனம் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு சற்று முன்னதாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்த எம்ஐ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலின் விலை குறைந்த எடிஷன் ஆகும்.

பட்ஜெட் விலையில் Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C அறிமுகம்! விலை என்ன?

புதிய Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C சாதனம் சமீபத்தில் Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C சாதனத்தின் சார்ஜிங் கேஸ் 20 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது. இதில் டூயல் மைக், சரவுண்ட் நாய்ஸ் கேன்சலிங் (ஈஎன்சி) மற்றும் மேம்பட்ட ஒலி தரத்திற்காக 14.2 மிமீ டிரைவர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 சி விலை மற்றும் விற்பனை பற்றி இப்பொழுது பார்க்கலாம். புதிய Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C, இந்தியாவில் வெறும் ரூ. 2,499 என்ற விலையில் வெறும் வைட் வண்ண விருப்பத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை இப்பொழுது பிளிப்கார்ட், Mi.com மற்றும் நிறுவனத்தின் கூட்டாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

புதிய Mi இயர்போன்ஸ் சாதனம் ப்ளூடூத் 5 இணக்கத்துடன், டூயல் மைக்ரோபோன்கள், 14.2 எம்எம் டிரைவர்களுடன் வருகிறது. மேலும் இதில் ஏஏசி கோடெக், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளதால் ஆடியோ அனுபவம் மிரட்டலாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. Mi போன்களுடன் பாஸ்ட் பேரிங் செய்யும் திறனும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 5 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்டை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Mi True Wireless Earphones 2C With Environmental Noise Cancellation Launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X