அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் மி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து அருமையான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிறுவனம் தனது மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 மாடலை இந்தியாவில் கடந்த மே மாதம் ரூ.4,999-விலையில் அறிமுகம் செய்தது.

தற்சமயம் இநத மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.3,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இந்த இயர்போனுடன் கானா பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. பின்பு இந்த சாதனத்ததை வாங்குவோருக்கு ரூ.199மதிப்புள்ள கூப்பன் கோட் வழங்கப்படுகிறது, இதனை பயனர்கள் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி இலவசமாக கான பிளஸ் சந்தாவை பெற முடியும், இந்த சலுகையானது செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்த மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன் 2 சாதனம் ஆனது அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது, சியோமின் மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் 14.2 எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் டைட்டானியம் கம்போசிட் டைஃப்கிராம் உள்ளிட்ட சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளது,எனவே இது ஆடியோ தரம், கால் அழைப்புகளின் தரம்மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சியோமியின் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடல் ஆனது ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
குறிப்பாக இந்த சாதனத்திற்கு யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் பத்து நிமிடங்களில் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு இந்த அருமையான சாதனத்தை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலையைப் பொருத்த வரை புதிய இயர்போன்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கிறது. தவிர நாய்ஸ், போட் போன்ற சில நிறுவனங்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்துள்ளது. புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications