Home
Gadgets

இன்று விற்பனைக்கு வரும் அசத்தலான சியோமி 75-இன்ச் ஸ்மார்ட் டிவி.! விலை மற்றும் விபரங்கள்.!

சியோமி நிறுவனம் கடந்த வாரம் புதிய 75-இன்ச் Mi QLED TV மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இன்று அந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல் மி.காம் வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது. சரியாக இன்று மதியம் 12 மணி அளவில் 75-இன்ச் Mi QLED TV மாடலை வாங்க முடியும்.

75-இன்ச் Mi QLED TV மாடல்

குறிப்பாக சியோமி 75-இன்ச் Mi QLED TV மாடல் ஆனது ரூ.1,19,999-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரே நிறத்தில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இப்போது 75-இன்ச் Mi QLED TV மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

சியோமி 75-இன்ச் Mi QLED TV மாடல் 4கே யுஎச்டி பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 3,840 x 2,160 தெளிவுத்திறன் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகிறது. இதுதவிர டைனமிக் லோக்கல் டிம்மிங், டால்பி விஷன், எச்டிஆர் 10+ மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த அம்சங்கள் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

மீடியாடெக் எம்டி9611 பிராசஸர்

மீடியாடெக் எம்டி9611 பிராசஸர்

இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் 1.5ஜிகாஹெர்ட் மீடியாடெக் எம்டி9611 பிராசஸர் வசதியுடன் மாலி ஜி52 P2 GPU ஆதரவு உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 75-இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 75-இன்ச் Mi QLED TV மாடலில் 2

குறிப்பாக சியோமி 75-இன்ச் Mi QLED TV மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் YouTube ஆப் பயன்பாடுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

 கூகிள் அசிஸ்டென்ட்

அலெக்ஸா மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் குரல் கட்டளைகளில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கட்டுப்பாட்டுக்கான உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனையும் இது கொண்டுள்ளது. அலெக்சா ஆதரவுடன் சியோமியின் முதல் ஸ்மார்ட் டிவி இதுவாகும். இந்த ஸ்மார்ட் டிவியின் ஆடியோ பொறுத்தவரை,30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது, இதில் இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் நான்கு வூஃப்பர்கள் உள்ளன. மேலும் இது டால்பி ஆடியோவைக் கொண்டுள்ளது, ஆனால் HDMI மூலம் இணக்கமான ஆடியோ சாதனங்களில் டால்பி அட்மோஸை ஆதரிக்கிறது.

ரு HDMI 2.1 போர்ட், இரண்டு HDMI 2.0

புளூடூத் 5.0, ஒரு HDMI 2.1 போர்ட், இரண்டு HDMI 2.0 போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட Chromecast உள்ளது.

Best Mobiles in India

English summary
Mi QLED TV 75 Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X