Mi QLED TV 4K 55' இன்ச் மாடலாக இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

|

சியோமி நிறுவனம் இந்திய சந்தைக்கு புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது Mi QLED 4K ஸ்மார்ட் டிவியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவியின் விலை, விற்பனை தேதி மற்றும் இந்த டிவியின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

Mi QLED TV 4K சாதனம்

Mi QLED TV 4K சாதனம்

Mi QLED TV 4K சாதனம் இந்தியாவில் டிசம்பர் 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட், மி.காம், மி ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் ஆன்லைன் கடைகள் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற சில்லறை கடைகள் வழியாகவும் இந்த Mi QLED TV 4K டிவி விற்பனைக்கு வரும் என்று சியோமி தெரிவித்துள்ளது.

55' இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎல்இடி

55' இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎல்இடி

Mi QLED TV 4K சாதனம் 55' இன்ச் அல்ட்ரா எச்டி கியூஎல்இடி டிஸ்பிளேவுடன் 3840 x 2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. இதில் எச்.எல்.ஜி, எச்.டி.ஆர் 10, எச்.டி.ஆர் 10 பிளஸ் மற்றும் டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு எச்.டி.ஆர் அம்சங்களுக்கான ஆதரவு இந்த டிவியில் உள்ளது. இந்த புதிய டிவி அண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது மற்றும் சமீபத்திய மென்பொருளில் இயங்கும் சில டிவிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆன்லைனில் லைக், ஷேர் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.. விளம்பரம் நல்லாருக்கு ஆனால் விபரீதமும் இருக்கே..ஆன்லைனில் லைக், ஷேர் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.. விளம்பரம் நல்லாருக்கு ஆனால் விபரீதமும் இருக்கே..

பேட்ச்வால் 3.5

பேட்ச்வால் 3.5

சியோமியைப் போலவே, நிறுவனம் தனது சொந்த UI ஐ பேட்ச்வால் மூலம் வழங்குகிறது. இந்த டிவியில் வீடியோ தொடர்பான பல்வேறு அம்சங்களுக்காக பேட்ச்வால் 3.5 கொடுக்கப்பட்டுள்ளது. இது மீடியாடெக் எம்டி 9611 குவாட் கோர் சிப்செட் உடன், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. சியோமி அதன் முந்தைய ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு வழங்கிய அதே ரிமோட்டையும் வழங்கியுள்ளது.

ரிமோட்டில் மியூட் பட்டன் நீக்கம்

ரிமோட்டில் மியூட் பட்டன் நீக்கம்

டிவி ரிமோட்டில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட சில ஹாட்-கீகள் உள்ளது. ரிமோட்டில் பிரத்தியேக கூகிள் அசிஸ்டென்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரிமோட்டில் மியூட் பட்டன் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. டிவியை மியூட் செய்ய பயனர்கள் வால்யூம் டவுன் பட்டனை இரண்டு முறை அழுத்துவதன் மூலம் ஆடியோவை முடக்கம் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை

விலை

இந்த புதிய டிவியில் 30W ஆறு-ஸ்பீக்கர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஸ்பீக்கர்கள் புல் ரேஞ் ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. டிவியில் மூன்று எச்டிஎம்ஐ 2.1 போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளது. டிவியில் புளூடூத் 5.0 அம்சமும் உள்ளது. இந்த புதிய டிவியின் விலை ரூ. 54,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mi QLED TV 4K launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X