இனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம்.! வருகிறது தரமான சியோமி சாதனம்.!

|

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. அன்மையில் இந்நிறுவனம் செய்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில்நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய சந்தைகளில்

அதேசமயம் இந்நிறுவனம் வீட்டு உபகரணங்களையும் அறிமுகம் செய்துவருகிறது, அதற்கும் நல்ல வரவேற்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறவனம் ஒருவர் கற்பனை செய்யக்கூடியதை விட அதிகமான பிரிவுகளில் தடம் பதிக்க எண்ணியுள்ளது.அதன் ஒரு பகுதியாக விரைவில் இந்திய சந்தைகளில் ஒரு புதிய சாதனம் அறிமுகம் ஆக இருக்கிறது.

 ஏர் கம்ப்ரசர்

அதன்படி மி போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் (Mi Portable Electric Air Compressor) எனும் சாதனத்தை வரும் ஜூலை 14 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த மி போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா? அப்போ இதை படியுங்க - புதிய ரோபோட் தொட்டில்!இரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா? அப்போ இதை படியுங்க - புதிய ரோபோட் தொட்டில்!

முன்னதாக சியோமி இந்தியாவின் ட்விட்டர் தளத்தின் இந்த மி போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் சாதனத்தின் டீசர் வெளியானது. இப்போதைக்கு விலை ஒரு யூகமாக இருந்தாலும், இங்கிலாந்தில் உள்ள சாதனத்தின் விலை GBP39.99(தோராயமாக ரூ.3,700)-ஆக உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் இதே விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சாலை பைக் டயர்கள்

குறிப்பாக இந்த சாதனம் சாலை பைக் டயர்கள் மற்றும் சைக்கிள் டயர்களிலும் காற்று நிரப்புகிறது, இது 150 psi வரை அழுத்தம் கொடுக்கப்படலாம் மற்றும் கால்பந்து மற்றும் கார் டயர்களுக்கும் காற்று நிரப்பும் என்று கூறப்படுகிறது.

 குறிப்பாக இந்த

இந்த ஏர் கம்ப்ரசரில் LED ஒளி, psi அளவைக் காண்பிக்கும் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோ யு.எஸ்.பி சார்ஜிங் போர்ட் மற்றும் 2,000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுஎன அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்டில் ஓப்போ அற்புத தின விற்பனை: அட்டகாச சலுகைகள்., ஜூலை 10 முதல் 13 வரை மட்டுமே!பிளிப்கார்டில் ஓப்போ அற்புத தின விற்பனை: அட்டகாச சலுகைகள்., ஜூலை 10 முதல் 13 வரை மட்டுமே!

யோமி நிறுவனம் வரும் ஜூலை 15 ஆம்

மேலும் சியோமி நிறுவனம் வரும் ஜூலை 15 ஆம் தேதி உலகளாவிய சுற்றுச்சூழல் தயாரிப்பு தயாரிப்பு வெளியீட்டு 2020 நிகழ்வை நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு இரவு 8மணிக்கு அதாவது இந்தி நேரப்படி மாலை 5மணிக்கு தொடங்கும் என்றும், யூடியூப் மற்றும் சமூக ஊடக சேனல்களில் காண்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த நிகழ்வில் சியோமி டிவி, சியோமி Mi பேண்ட் 5, Mi எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 1 s மற்றும் 34 இன்ச் வளைந்த மானிட்டர் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Mi Launching Portable Electric Air Compressor in India on July 14: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X