ரூ.1799/-க்கு மி பேசிக் 2 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்.!
எங்கும் எளிமையாக சுமந்து செல்லக்கூடிய இந்த மி பேசிக் 2 ஸ்பீக்கர் ஒருங்கிணைந்த ஒலிவாங்கிகள் மற்றும் இரைச்சல் ரத்து அம்சங்களை கொண்டுள்ளது.
சியோமி நிறுவனம் அதன் மற்றொரு ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை அதன் ஸ்பீக்கர் பிரிவில் இணைத்துள்ளது. இந்த மி பேசிக் 2 ஸ்பீக்கர் ஆனது ரூ.1,799/- என்ற விலை மதிப்பினை பெற்றுள்ளது மற்றும் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Mi.com) விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கரின் பிரதான சிறப்பம்சமானது அதன் பேட்டரி ஆகும். சியோமி நிறுவனத்தின் படி இந்த ஸ்பீக்கர் 10 மணிநேர பின்னணியை வழங்கும். இந்த மி பேசிக் ஆனது இரண்டு 2.5வாட் ஸ்பீக்கர்களை முன்னிலையாக கொண்டுள்ளது.
இது ஏயூஎக்ஸ் (AUX) அல்லது ப்ளூடூத் வழியாக எச்டி ஒலியினை வழங்கக்கூடியது மற்றும் இந்த ஸ்பீக்கர் 2402 முதல் 2480 மென்கார்ட்ஸ் வரையிலான ஒலி அதிர்வெண் வரம்பினை கொண்டுள்ளது. ஒரு மேட் அலுமினிய செவ்வக வடிவத்தை கொண்டுள்ள இந்த ஸ்பீக்கர்அளவீட்டில் 154.5 மிமீ x 60 மிமீ x 25.5 மிமீ பரிமாணங்களை கொண்டுள்ளதுடன், 237 கிராம் எடையையும் கொண்டிருக்கிறது.

எங்கும் எளிமையாக சுமந்து செல்லக்கூடிய இந்த மி பேசிக் 2 ஸ்பீக்கர் ஒருங்கிணைந்த ஒலிவாங்கிகள் மற்றும் இரைச்சல் ரத்து அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் இதை ஒரு ஸ்பீக்கர் போனாகவும் பயன்படுத்தலாம். அவ்வண்ணமே கூகுள் அசிஸ்டென்ட் ஆன சிரியை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications