ரூ,1,299, 20 நாட்கள் பேட்டரி ஆயுள்: சியோமி பேண்ட் 3-ஐ அறிமுகம்

|

சியோமி இந்தியாவில் மி பேண்ட் 3ஐ என்ற புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்த உள்ளது. இது கையில் அணியக் கூடிய வகையிலும், எல்இடி டச் ஸ்கிரீன், 5 ஏடிஎம் வாட்டர் புரூஃப், 20 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் மற்றும் அலர்ட் மெசேஜுடன் வழக்கமான கேலரி அமைப்புகளை கொண்டுள்ளது.

அடிப்படை அம்சங்கள்

அடிப்படை அம்சங்கள்

எம்ஐ பேண்ட் 3 ஐ மாடலானது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பேண்ட் 3 பிட்னெஸ் பேண்டின் அடிப்படை அம்சங்களோடு அறிமுகம் படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த மாடல் கடந்த எம்.ஐ 3-ன் விலையை விட குறைவானது. அதேபோல் எம்.ஐ பேண்ட் 3 ஐ ஆனது இதயதுடிப்பை கண்காணிக்கவும் உதவுகிறது.

குறைவான விலையில் அறிமுகம்

குறைவான விலையில் அறிமுகம்

எம்.ஐ ஸ்மார்ட் பேண்ட் 3 ஐ இந்தியாவில் ரூ.1,299-க்கு விற்பனைக்கு வர உள்ளது. இது கருப்பு நிறத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. எம்.ஐ 3 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போது அதன் விலை ரூ.1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.1,7999 ஆக விற்கப்படுகிறது.

எம்.ஐ 4 பேண்ட்டின் விலை

எம்.ஐ 4 பேண்ட்டின் விலை

அதேபோல் எம்.ஐ.காம்மில் கிடைக்கும் எம்.ஐ பேண்ட் 4 ரூ. 2,999 ஆக கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் எல்இடி டிஸ்ப்ளே மற்றும் 20 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் கொண்டது.

எம்.ஐ பேண்ட் 3 ஐ அம்சங்கள்:

எம்.ஐ பேண்ட் 3 ஐ அம்சங்கள்:

எம்.ஐ பேண்ட் 3ஐ பேண்டானது, 0.78-இன்ச் (128x80 பிக்சல்கள்), மோனோக்ரோம் ஒயிட் எல்இடி டிஸ்ப்ளே 300 நைட் டிஸ்பிளே மற்றும் டச் பேனலுடன் கொண்டது. 110 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது 20 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் இந்த எம்.ஐ பேண்டை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும் என்று சியோமி கூறுகிறது. இது ஆண்ட்ராய்டு 4.4 இல் இருந்து ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 9 வரை இயங்கும். இது 3 ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Mi Band 3i With 20-Day Battery Life, Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X