பெசல்-லெஸ் டிசைன்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. குறைந்த விலையில் சியோமி டிவி.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் அசத்தலான 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது சியோமி நிறுவனத்தின் எம்ஐ 32-இன்ச் ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சியோமி டிவியை தற்போது ரூ.12,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.

கடந்த ஜூலை மாதம் தான் இந்தியாவில் சியோமி எம்ஐ 32-இன்ச் ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
மெட்டல் பெசல்-லெஸ் (Bezel-less) வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி எம்ஐ 32-இன்ச் ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி. பின்பு 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
எச்டி ரெடி டிஸ்பிளே மற்றும் 1366 x 768 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் ஏ35 சிப் (Quad Core A35) வசதி உள்ளது. இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த சியோமி ஏ சீரிஸ் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.
அதேபோல் இந்த டிவி கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, பிளே ஸ்டோர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் (Graphic Processor) ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக பேட்ச்வால் + (PatchWall +) ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல். அதேபோல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி. டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 32-இன்ச் ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி ஆனது புளூடூத் 5.0, வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி, 3.5எம்எம் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக தரமான அம்சங்களுடன் 32-இன்ச் டிவியை தேடும் பயனர்கள் இந்த சியோமி நிறுவனத்தின் எம்ஐ 32-இன்ச் ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவியை தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications