இவ்வளவு விலை குறையும்னு யாருமே எதிர்பார்க்கல.. 40-இன்ச் Xiaomi டிவிக்கு ஆஃபர் போட்ட அமேசான்.!
அமேசான் தளத்தில் அமேசான் பிரீமியம் டிவி டே சேல் (Amazon Premium TV Days Sale) எனும் சிறப்பு தற்போது விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் ஜூலை 23ஆம் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு விற்பனை இருக்கும்.
குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி நிறுவனத்தின் 40-இன்ச் எம்ஐ டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 40-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் (Horizon Edition) ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 4ஏ மாடலுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு இந்த ஸ்மார்ட் டிவி ரூ.29,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது அமேசானில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடியின் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.18,999-விலையில் வாங்கமுடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த 40-இன்ச் ஹாரிசன் எடிஷன் மாடல் ஆனது பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 93.7% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகிறது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். பின்பு ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல அசத்தலான சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவாட்-கோர் பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். எனவே குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
ஆடியோவைப் பொறுத்தவரை இந்த 40-இன்ச் எம்ஐ ஹாரிசன் எடிஷன் ஆனது DTS-HD உடன் 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 3.5மிமீ ஆடியோ அவுட், வைஃபை, யுஎஸ்பி போர்ட் மற்றும் மூன்று எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பாக இந்த இணைப்பு ஆதரவுகள் சவுண்ட்பார், ஹோம் தியேட்டர் போன்ற பல சாதனங்களுடன் எளிதாக இணைக்க உதவுகிறது. மேலும் இந்த 40-இன்ச் ஹாரிசன் எடிஷன் மாடலில் Vivid Picture Engine (VPE) technology இருப்பதால் சிறந்த திரைஅனுபவத்தைப் பெறமுடியும். குறிப்பாக அதேசமயம் துல்லியமான காட்சிகள் மற்றும் சிறந்த வண்ணங்களை வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் 40-இன்ச் ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.. குறிப்பாக பல அசத்தலான அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த ஸ்மார்ட் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








