Meta ரேய்-பேன் ஜென் 2 அறிமுகம்.. 2X பேட்டரி.. 3K UHD வீடியோ ரெக்கார்டிங்.. லைவ் டிரான்ஸ்லேஷன்!
மெட்டா நிறுவனத்தின் ரேய்-பேன் ஜென் 2 (Ray-Ban Gen 2) ஸ்மார்ட் கிளாஸ்ஸஸ் ஆனது 2 மடங்கு பேட்டரி பேக்கப், 3K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் போன்ற அப்கிரேட் பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கிறது. அதேபோல மெட்டா ஏஐ பீச்சர்களும் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ரேய்-பேன் ஜென் 2 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரேய்-பேன் ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்ஸஸ் ஏற்கனவே வெளியாகி மார்க்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இந்தியாவிலும் இது விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது அதன் ஜென் 2 மாடல் வெளியாகியிருக்கிறது. இதில் பல்வேறு பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றன. பேட்டரி பேக்கப், வீடியோ ரெக்கார்டிங், ஏஐ டிரான்ஸ்லேஷன் மற்றும் ஃப்ரேம் ஸ்டைல்களில் அப்கிரேட்கள் இருக்கின்றன.

8 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி கிடைக்கிறது. இது முந்தைய ஜென் 1 மாடலைவிட டபுள் மடங்காக இருக்கிறது. அதேபோல ஃபாஸ்ட் சார்ஜிங் 20 நிமிடங்களில் 50 சதவீதம் செய்து கொள்ளும்படி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கொடுக்கப்படும் சார்ஜிங் கேஸில் ஃபுல் சார்ஜ் செய்தால்போதும் மொத்தமாக 48 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.
வீடியோ ரெக்கார்டிங் பீச்சர்களிலும் அப்கிரேட் இருக்கிறது. இந்த ஜென் 2 மாடல் மூலம் 3K Ultra HD வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இதுபோக அல்ட்ராவைடு எச்டிஆர் சப்போர்ட் கிடைக்கிறது. 60fps ரெக்கார்டிங் செய்ய முடியும். இதுபோக ஹைப்பர்லேப்ஸ் (Hyperlapse), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) போன்ற பீச்சர்களும் அப்கிரேட் செய்யப்பட இருக்கிறது.
மெட்டா ஏஐ பீச்சர்களும் அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதில் லைவ் டிரான்ஸ்லேஷன் பீச்சரில் ஜெர்மன் மற்றும் போர்ச்சுகீஸ் உள்ளிட்ட 6 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஜெர்மன் மற்றும் போர்ச்சுகீஸ் மட்டும் இப்போது லைவ்வில் இருக்கின்றன. மற்ற மொழிகள் அப்கிரேட் மூலம் சேர்க்கப்பட இருப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது.
கான்வர்சேஷன் போகஸ் (Conversation Focus) என்னும் புதிய பீச்சர் கிடைக்கிறது. இந்த பீச்சர் மூலம் ஓப்பன்-இயர் ஸ்பீக்கர்கள் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். நாய்ஸ் அதிகமாக இருக்கும் இடங்களில் கிளியர் வாய்ஸ் அவுட்புட் கொடுக்க இந்த பீச்சர் கிடைக்கிறது. மேலும், டெய்லி லைஃப்-புக்கு ஏற்ப புதிய ஃப்ரேம் ஸ்லைட்களில் கிடைக்க இருக்கிறது.
மெட்டா ரேய்-பேன் ஜென் 2 அம்சங்கள் (Meta Ray-Ban Gen 2 Specifications): 12 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுக்கிறது. 3024 x 4032 ரெசொலூஷன் கொடுக்கிறது. 3K அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஓப்பன்-இயர் ஆடியோ மற்றும் அடாப்டிவ் வால்யூம் சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர் கிடைக்கிறது. 5 மைக்குகள் கிடைக்கின்றன. 50 சதவீத லவுட் கிடைக்கிறது.
அதேபோல 2X பேஸ் கொடுக்கப்படுகிறது. 8 மணி நேரங்களுக்கு ஹெவி யூசேஜ் செய்யலாம். 19 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்பை கொடுக்கும். 48 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸ் உடன் பேக்கப் கொடுக்கும். 20 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். 32 ஜிபி மெமரி கொடுக்கிறது. போட்டோஸ் மற்றும் வீடியோஸ் ஸ்டோர் செய்யலாம்.
வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவி்ட்டி கிடைக்கிறது. மெட்டா ஏஐ ஆப் கிடைக்கிறது. 24 மாத வாரண்டி கிடைக்கிறது. 379 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.33,400) இருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில் ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம். வேய்பாரர் (Wayfarer), ஸ்கைலர் (Skyler) மற்றும் ஹெட்லைனர் (Headliner) கலர்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications