Home
Gadgets

அப்படி போடு: ஸ்மார்ட்வாட்ச் பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன WhatsApp.! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம். எனவே தான் டெலிகிராம் செயலியை விட வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியைக் கூறியுள்ளது. அதாவது தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்து துவங்கிவிட்டனர். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் உடல்நல பாதுகாப்பு அம்சங்கள் முதல் வானிலை விவரங்கள் முதல் அனைத்துமே இருக்கின்றன.

அப்படி போடு: ஸ்மார்ட்வாட்ச் பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன WhatsApp.!

எனவேதான் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அனைவரும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு வேண்டி மெட்டா நிறுவனம் standalone app-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்வாட்ச் அணிந்தபடியே மெசேஜ் அனுப்பலாம், கால் பேசலாம் மற்றும் பல அம்சங்கள் இதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த செயலியை (standalone app) மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பர்க் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக Wearables-க்கான கூகுள்-இன் இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான Wear OS 3 இல் இயங்கும் ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த செயலியைப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் கூட இப்போது வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ் அனுப்ப முடியும், சாட் செய்ய முடியும். Wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களின்படி, வாட்ஸ்அப் பயனர்கள் புதிய நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப நேரிட்டால், அந்த நம்பரை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

முன்பு யாருக்காவது வாட்ஸ்அப்-இல் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் அவரது மொபைல் எண்ணை சேமிக்க வேண்டியது அவசியாமக இருந்தது. தற்போது ஒருவரின் நம்பரை சேவ் செய்யாமலேயே வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் அனுப்பலாம். மேலும் மொபைல் நம்பரை சேவ் செய்யாமல் நேரடியாக மெசேஜ் அனுப்பவது எப்படி என்று பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து கொள்ளுங்கள். அடுத்து வலது புறம் கீழே இருக்கும் நியூ சாட் பட்டனை ஓபன் செய்யுங்கள். அங்கு மேலே லென்ஸ் வடிவில் உள்ள பட்டனை க்ளிக் செய்து தாங்கள் மெசேஜ் செய்ய விரும்பும் எண்ணை அழுத்த வேண்டும்.

அப்படி போடு: ஸ்மார்ட்வாட்ச் பயனர்களுக்கு குட் நியூஸ் சொன்ன WhatsApp.!

வழிமுறை-2: அடுத்தது அந்த எண்ணுக்கு அருகில் சாட் என ஆப்ஷன் வரும் அதை கிளிக் செய்தால் போதும், அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பலாம். குறிப்பாக இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் குரூப் சாட், வாய்ஸ் கால், வீடியோ கால், யுபிஐ பேமெண்ட் வசதி என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் விரைவில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Meta launches standalone app for smartwatches: What are the benefits? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X