Home
Gadgets

வயர்லெஸ் இயர்பட்ஸ், அலோ லேசர் இயர்போன்-ஐ அறிமுகப்படுத்திய மெய்ஸூ.!

மெய்ஸூ பாப் வயர்லஸ் இயர்பட்ஸ்-ன் விலை 499CNY (சுமார் ரூ5,200) எனவும், மெய்ஸூ அலோ லேசர் இயர்போனின் விலை 999CNY (சுமார் ரூ10,900) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By Vivek Sivanandam

கடந்த ஞாயிறு அன்று மெய்ஸூ15, மெய்ஸூ15 ப்ளஸ் மற்றும்மெய்ஸூ15லைட் ஸ்மார்ட் போன்களை வெளியிட்ட மய்சூ நிறுவனம், மெய்ஸூ பாப் வயர்லஸ் இயர்பட்ஸ் மற்றும் மெய்ஸூ அலோ லேசர் இயர்போன்ஸ் என்ற இரண்டு புதிய வயர்லஸ் இயர்போன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வயர்லெஸ் இயர்பட்ஸ், அலோ லேசர் இயர்போன்-ஐ அறிமுகப்படுத்திய மெய்ஸூ.!

ஆப்பிள் ஏர்பாட்ஸ் மற்றும் சாம்சங் கியர் ஐகான் எக்ஸ்க்கு போட்டியாக மெய்ஸூ பாப் வயர்லஸ் இயர்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு ஆர்வலர்களை கவரும் வகையில், பிக்சல்பட்ஸ்-க்கு போட்டியாக மெய்ஸூ அலோ லேசய் இயர்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெய்ஸூ பாப் வயர்லஸ் இயர்பட்ஸ்-ன் விலை 499CNY (சுமார் ரூ5,200) எனவும், மெய்ஸூ அலோ லேசர் இயர்போனின் விலை 999CNY (சுமார் ரூ10,900) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தொடுஉணர்வு வசதியுள்ள மெய்ஸூ பாப் வயர்லஸ் இயர்பட்ஸ்-ல் பயனர் தொடுவதன் மூலம் பாடல்களை ஒலிபரப்ப, நிறுத்த, மாற்றவும் முடியும். மேலும் இந்த தொடுஉணர்வின் மூலம் அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கவும் மற்றும் வாய்ஸ் அஸிஸ்டென்ட்டை இயக்கவும் செய்யலாம். இந்த இயர்போனில் ப்ளூடூத்4.2 வசதியும், ஐ.பி.எக்ஸ்5 தரத்தில் வியர்வை எதிர்ப்புதிறனும் உள்ளது.

மெய்ஸூ இயர்பட்ஸின் கேஸ், 700mAh பேட்டரியுடன் 12 மணிநேரம் தாக்குபிடிக்கக் கூடியது. இயர்பட்ஸிலும் தனியாக 3 மணி நேரம் தாக்கு பிடிக்கக்கூடிய 85mAh பேட்டரி உள்ளது. இதில் உள்ள யூ.எஸ்.பி டைப் சி போர்ட் மூலம் சார்ஜ் செய்ய இயலும்.

மெய்ஸூ அலோ லேசர் இயர்போன்களை பொறுத்தமட்டில், OSRAM ஆல் வடிவமைக்கப்பட்ட லேசர் டையோடுகளுடன் இயங்குகிறது. இதில் உள்ள மியூசிக் மோட், ஸ்டேடிக் மோட் மற்றும் ப்ளேஷ் மோட்களை செயலியின் வாயிலாக மாற்றலாம்.

வயர்லெஸ் இயர்பட்ஸ், அலோ லேசர் இயர்போன்-ஐ அறிமுகப்படுத்திய மெய்ஸூ.!

சிறப்பான அனுபவத்தை பெற லேசர் லைட்டுகளை தங்களுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளலாம். 50% பிரகாசத்துடன் லேசர் லைட்டை பயன்படுத்தும் போது, இந்த இயர்போன் 5 மணி நேரம் பேட்டரி தாக்குபிடிக்கக்கூடியதாகவும், லைட் ஆப் செய்திருந்தால் 15 மணி நேரமும் தாக்குபிடிக்கும்.

இதனுடன் வரும் ரிமேட் மூலம் லேசர் டையோடுகள் மற்றும் இசையை கட்டுப்படுத்தலாம். இதில் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் வசதியுள்ளது.


மெய்ஸூ பாப் வயர்லஸ் இயர்பட்ஸ் மற்றும் அலோ லேசர் இயர்போன்கள் ஏப்ரல் 29 முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. மற்ற நாடுகளில் வெளியாவது பற்றியும், விலை விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

English summary
Meizu POP Wireless Earbuds, Halo Laser Earphones Launched; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X