Home
Gadgets

Marshall போட்ட போடு.. CD, வாஷிங் மெஷின், e-பைக்கில் இருந்து Earbuds.. எந்த மாடல்? என்ன விலை?

மார்ஷல் (Marshall) நிறுவனம் அதன் இயர்பட்ஸ் (Earbuds) வரிசையில் புதிதாக மார்ஷல் மைனர் IV ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (Marshall Minor IV True Wireless Earbuds) என்ற TWS இயர்பட்ஸ் (TWS earbuds) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. பல பிரபலங்கள் முதல் பணக்காரர்கள் வரை விரும்பி வாங்கும் மார்ஷல் சாதனங்களின் பட்டியலில் இந்த புதிய மார்ஷல் மைனர் IV பிளாக் இயர்பட்ஸ் (Marshall Minor IV Black Earbuds) சாதனம் சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்போது இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. இதன் விலை மற்றும் முழு சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.

மார்ஷல் (Marshall) என்ற உலகத்தரம் வாய்ந்த பிராண்ட் பற்றி அறியாதவர்களுக்காக, மார்ஷல் பற்றி சில தகவல்களை முதலில் தெரிந்துகொண்டு நேரடியாக பதிவிற்கு செல்லலாம். மார்ஷல் ஆம்ப்ளிஃபிகேஷன் (Marshall Amplification) என்பது ஒரு பிரிட்டிஷ் நிறுவனமாகும். இது மியூசிக் ஆம்ப்ளிஃபயர் (music amplifiers) மற்றும் ஸ்பீக்கர் பெட்டிகளை (speaker cabinets) வடிவமைத்து தயாரிக்கிறது. ஜிம் மார்ஷலால் (Jim Marshall) என்ற ட்ரம்மர் (Drummer) தான் இதன் ஓனர்.

Marshall போட்ட போடு.. CD, வாஷிங் மெஷின், e-பைக்கில் இருந்து Earbuds..

மார்ஷல் மைனர் IV பிளாக் இயர்பட்ஸ் (Marshall Minor IV Black Earbuds):

இந்த நிறுவனம் லண்டனில் நிறுவப்பட்ட இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ், பிளெட்ச்லியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் துவக்கப்பட்டு 62 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. இருப்பினும், மார்ஷல் நிறுவனத்தின் இயர்பட்ஸ் பிரிவில் மொத்தமே 3 இயர்பட்ஸ் சாதனங்களை தான் நிறுவனம் இதுவரை வைத்திருந்தது. இப்போது புதிய 4வது இயர்பட்ஸ் சாதனமாக நிறுவனம் இந்த மார்ஷல் மைனர் IV இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, இது சிறிய ஸைஸில் என்றாலும் இதன் ஆடியோ தரம் (Audio quality) சூப்பர் பவர்புல்ளாக இருக்கிறது. இந்த புதிய மார்ஷல் மைனர் IV இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம் பல அற்புதமான அம்சங்களை கொண்டு உருவாக்கியுள்ளது. இந்த இயர்பட்ஸை நிறுவனம் மிரர் டச் கண்ட்ரோல் (Mirror touch control), ப்ளூடூத் பேரிங் (Bluetooth paring), ஐபிஎக்ஸ்4 (IPX4) வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் உருவாக்கியுளளது.

இந்த புதிய மார்ஷல் மைனர் IV (Marshall Minor IV) இயர்பட்ஸ் 12mm டைனமிக் டிரைவர் (Dynamic Driver) உடன் வருகிறது. சாதனம் 42% ரீசைக்கிள் செய்யப்பட்ட பிளாஸ்டிக் (recycled plastic) மூலம் உவருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 90% சதவீத பொருள்கள், பயன்படுத்தப்பட்ட சிடி (CD), வாஷிங் மெஷின் (Washing machine) மற்றும் எலக்ட்ரிக் பைசைக்கிள் (Electric Bicycles) போன்ற சாதனங்களில் இருந்து எடுக்கப்பட்டு, மீண்டும் பயணத்துப்பட்டுள்ளதாக மார்ஷல் தெரிவித்துள்ளது.

மார்ஷல் மைனர் IV பிளாக் இயர்பட்ஸ் விலை (Marshall Minor IV Black Earbuds Price):

இந்த மார்ஷல் மைனர் IV (Marshall Minor IV) இயர்பட்ஸ் மொத்தமாக 30+ மணிநேர பிளேபேக் நேரத்தை (30+ hours playback time) வழங்குகிறது. இது சார்ஜிங் கேஸ் (charging case) உடன் கிடைக்கும் பிளேபேக் நேரமாகும். இந்த மார்ஷல் மைனர் IV (Marshall Minor IV) இயர்பட்ஸ் சாதனம் சார்ஜிங் கேஸ் தேவை இல்லாமல் 7 மணி நேர பிளே நேரத்தை (7 hours play time) வழங்குகிறது.

இந்த டிவைஸ் 15 நிமிட ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast charging) உடன் 3 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. மார்ஷல் மைனர் IV பிளாக் இயர்பட்ஸ் (Marshall Minor IV Black Earbuds) சாதனம் இப்போது இந்தியாவில் ரூ. 11,999 என்ற விலையுடன் (Price) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 15, 2024 முதல் Marshall.com வழியாக விற்பனைக்கு (sale) வாங்க கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Marshall Minor IV Black TWS Earbuds Launched With 30 Hour Playback Time At Price Of Rs 11999 Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X