நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்.. Redmi-க்கு ரிவீட் அடிச்ச Marshall.. 80 மணி நேர பேட்டரி உடன் புது ஹெட்போன்!
இப்போதைக்கு ரெட்மி நிறுவனத்தின் மைண்ட் வாய்ஸ் ஆனது "அடி எடுத்து வச்ச உடனேயே அடிக்கிறீங்களே டா" என்பதாகவே இருக்கும். ரெட்மி நிறுவனம் 72 மணிநேர பேட்டரி லைஃப் உடன், அதன் முதல் ஆன்-இயர் ஹெட்போன்ஸை அறிமுகம் செய்து ஹெட்போன் சந்தைக்குள் காலடி எடுத்து வைத்த வேகத்தில்.. மார்ஷல் நிறுவனம் 80 மணிநேர பேட்டரி லைஃப் உடன் புதிய ஹெட்போன்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
என்ன மாடல்? மார்ஷல் (Marshall) நிறுவனம் தனது புதிய மில்டன் ஏஎன்சி வயர்லெஸ் ஆன்-இயர் ஹெட்ஃபோன்ஸை (Milton ANC wireless on-ear headphones) இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய மாடல், அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு மற்றும் ஏஎன்சி இல்லாமல் ஒரே சார்ஜில் 80 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரி லைஃப் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும், இது ப்ளூடூத் 6.0, சவுண்ட்ஸ்டேஜ் ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் மாற்றக்கூடிய பேட்டரி (Replaceable battery) ஆகிய கவனிக்கத்தக்க அம்சங்களையும் வழங்குகிறது. இந்த விலைப் பிரிவில் இத்தகைய அம்சங்கள் இன்னும் அரிதாகவே காணப்படுகின்றன. நீண்ட பேட்டரி லைஃப் மற்றும் மார்ஷல் பிராண்டிங்கிற்கு முக்கியத்துவம் அளித்து, ஒரு பிரீமியம் வயர்லெஸ் ஆடியோ அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக, மார்ஷல் மில்டன் ஏஎன்சி மாடலை - கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்!
மார்ஷல் மில்டன் ஏஎன்சி ஹெட்போன்ஸ் மற்ற அம்சங்கள்:
- 32 மிமீ டைனமிக் டிரைவர்
- SBC, AAC, LC3 மற்றும் LDAC கோடெக்குகளுடன் ஹை-ரெஸ் ஆடியோவை ஆதரவு
- மார்ஷல் ப்ளூடூத் ஆப் மூலம் சவுண்ட்ஸ்டேஜ் ஸ்பேஷியல் ஆடியோ ஆதரவு
- LE ஆடியோவுடன் கூடிய ப்ளூடூத் 6.0
- ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இணைப்பதற்கான ப்ளூடூத் மல்டிபாயின்ட்
- USB டைப்-சி
- 3.5 மிமீ வயர்டு கனெக்ஷன்
- ANC ஆப் செய்யப்பட்ட நிலையில் 80 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ANC இயக்கப்பட்ட நிலையில் 50 மணிநேரத்திற்கும் மேலான பேட்டரி லைஃப்
- 15 நிமிட சார்ஜில் 9.5 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்
- முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் இரண்டு மணிநேரம்
- 200 கிராம் எடை
- ஆன்-இயர் டிசைன், மெமரி ஃபோம் இயர் குஷன்கள், சொரசொரப்பான TPU இயர்கப்கள், பவுடர் கோட் செய்யப்பட்ட மெட்டல் ஆர்ம்ஸ்
- மீடியா கண்ட்ரோல்கள், ஒலியளவை சரிசெய்தல் மற்றும் போன் கால்களை நிர்வகிகாக் கஸ்டமைஸபிள் M-பட்டன்
மார்ஷல் மில்டன் ஏஎன்சி ஹெட்போன்ஸ் விலை மற்றும் விற்பனை: இது ரூ.19,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக் கலர் ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கிறது. இது ஏற்கனவே மார்ஷல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், முக்கிய ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது
72 மணி நேர பேட்டரி லைஃப் உடன் அறிமுகமான ரெட்மி ஓவர்-இயர் ஏஎன்சி ஹெட்போன்ஸ்-ன் விலை என்ன? சீனாவில் இந்த ரெட்மி ஓவர்-இயர் ஏஎன்சி ஹெட்போன்ஸ்-ன் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.4,900 ஆகும். அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட காலத்திற்கு இது சுமார் ரூ.4,100 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ரெட்மி ஓவர்-இயர் ஏஎன்சி ஹெட்போன்ஸ் ஆனது ஜாஸ் ப்ளூ (Jazz Blue), ராக் பிளாக் (Rock Black) மற்றும் சிம்பொனி ஒயிட் (Symphony White) ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன்கள் ஏற்கனவே சீனாவிற்கான ஷாவ்மீ இணையதளத்தில் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றை உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்துவது குறித்த ரெட்மி நிறுவனம் எந்த திட்டத்தையும் இதுவரை அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications