Home
Gadgets

வெயிட்டிங் மோட் ஸ்டார்ட்.. வருது MacBook Neo 2 மாடல்.. OLED டிஸ்பிளே.. ஏ19 ப்ரோ சிப்செட்.. எப்போது அறிமுகம்?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த ஜெனரேஷன் மேக்புக் மாடலான மேக்புக் நியோ 2 (MacBook Neo 2) எப்போது வெளியாகும் என்பது குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது. முந்தைய மாடலை விட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படியான சிப்செட் மட்டுமல்லாமல், கூடுதல் மெமரி வேரியண்ட்டையும் கொடுக்க இருப்பது தெரியவந்துள்ளது.

லேப்டாப் மாடல்களில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மற்றும் லேக்-ப்ரீ அவுட்புட் வேண்டுமானால், மேக்புக் மாடல்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லலாம். இதனாலேயே புதிய ஜெனரேஷன் மாடல்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் ஆப்பிள் மேக்புக் நியோ (Apple MacBook Neo) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வெயிட்டிங் மோட் ஸ்டார்ட்.. வருது MacBook Neo 2 மாடல்.. OLED டிஸ்பிளே!

இந்தியாவில் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்கள் வெளியாகின. இருப்பினும், 1 டிபி மெமரி வேரியண்ட் வெளியாகாமல் போனது சற்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருந்தது. ஆனால், அடுத்த அடுத்த ஜெனரேஷன் மேக்புக் மாடலான மேக்புக் நியோ 2 லேப்டாப்பில் அதிக மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரொடெக்ட்கள் குறித்த டிப்களை வெளியிட்டுவரும், மார்க் குர்மேன் (Mark Gurman) இந்த மேக்புக் நியோ 2 மாடல் குறித்தும் அவரது எக்ஸ் தளத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஏ19 ப்ரோ (A19 Pro) சிப்செட் மற்றும் அதிக மெமரியுடன் மேக்புக் நியோ 2 வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, 256 ஜிபி மெமரி, 512 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 1 டிபி வரையில் மெமரி கொடுக்கும்படி வேரியண்ட்டை எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னதாக ஓஎல்இடி டிஸ்பிளேவை மேக்புக் நியோ 2 மாடலில் எதிர்பார்க்கலாம் என்பதையும் இவர் கூறியிருந்தார். இந்த பீச்சர்களுடன் அடுத்த வருடம் வெளியாகும் என்று மார்க் குர்மேன் அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிள் மேக்புக் நியோ மாடல் கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகியது. ஆகவே, மேக்புக் நியோ 2 மாடலை அடுத்த மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் மேக்புக் நியோ வெளியான போது, 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,900ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,900ஆகவும் இருந்தது.

ஆகவே, மேக்புக் நியோ 2 மாடலின் விலை ரூ.1,00,000 வரையில் இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப விலை வேரியண்ட் ரூ.89,990 பட்ஜெட்டில் இருந்தும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேக்புக் நியோ மாடலை பொறுத்தவரையில் ஆப்பிள் ஏ18 ப்ரோ (Apple A18 Pro) சிப்செட் கொடுக்கப்பட்டது. 13 இன்ச் (2408 x 1506 பிக்சல்கள்) லிக்விடு ரெடினா டிஸ்பிளே கொடுக்கப்பட்டது.

219 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்தது. மேஜிக் கீபோர்டு (Magic Keyboard), 512 ஜிபி வேரியண்ட்டில் டச் ஐடி (Touch ID) கொடுக்கப்பட்டது. மேலும், போர்ஸ் டச் டிராக்பேட் (Force Touch Trackpad) கிடைத்தது. 1080p ரெசொலுஷன் ஃபேம்டைம் எச்டி கேமராவுடன் வெளியாகியது. டூயல் ஸ்பீக்கருடன் சவுண்ட் சிஸ்டம் கிடைத்தது.

இதில் ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டூயல் மைக்குகள் கிடைத்தன. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது. யுஎஸ்பி 3, யுஎஸ்பி 2 போர்ட்கள் கிடைத்தன. வை-பை 6இ (Wi-Fi 6E) மற்றும் ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கிடைத்தது. 36.5W ஹவர் லித்தியம் பாலிமர் பேட்டரி கிடைத்தது. இதில் அப்கிரேட் செய்யப்படு நியோ 2 கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
MacBook Neo 2 With A19 Pro Chipset Launch Timeline Tipped Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X