Home
Gadgets

இந்தியாவில் Lumio Vision டிவிகள் அறிமுகம்.. டால்பி விஷன்.. கூகுள் டிவி OS.. டால்பி ஆடியோ.. என்ன விலை?

சர்க்யூட் ஹவுஸ் டெக்னாலஜிஸ் (Circuit House Technologies) இந்தியாவில் லுமியோ விஷன் 7 (Lumio Vision 7) மற்றும் விஷன் 9 (Lumio Vision 9) ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

லுமியோ விஷன் 9 அம்சங்கள் (Lumio Vision 9 TV Specifications): 55 இன்ச் அளவு கொண்ட லுமியோ விஷன் 9 ஸ்மார்ட் டிவி ஆனது 4K QD-MiniLED டிஸ்பிளே மற்றும் குவாண்டம் டாட் என்ஹான்ஸ்மென்ட் லேயரைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840×2160 பிக்சல்ஸ், 900 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் ஆதரவு, டால்பி விஷன் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் Lumio Vision டிவிகள் அறிமுகம்.. என்ன விலை?

இதுதவிர 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10, எசஎல்ஜி (HLG) போன்ற அம்சங்களும் இதன் டிஸ்பிளேவில் உள்ளன. குறிப்பாக BOSS பிளாக்ஷிப் பிராசஸர் ஆதரவுடன் இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 55 இன்ச் கொண்ட லுமியோ விஷன் 9 ஸ்மார்ட் டிவி ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இந்த டிவியில் Damn குட் சவுண்ட் (DGS) ஆடியோ டியூனிங் உள்ளது. பின்பு டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த லுமியோ விஷன் 9 டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட பல ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

அதேபோல் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. பின்பு DOPE பிக்சர் எஞ்சின் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் அவுட், மினி ஏவி இன், ஈதர்நெட், புளூடூத் 5, வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லுமியோ விஷன் 9 மாடலில் உள்ளன.

லுமியோ விஷன் 7 அம்சங்கள் (Lumio Vision 7 TV Specifications): 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என மூன்று அளவுகளில் லுமியோ விஷன் 7 ஸ்மார்ட் டிவி வாங்க கிடைக்கும். மேலும் குவாண்டம் டாட் என்ஹான்ஸ்மென்ட் லேயர் (Quantum Dot Enhancement Layer) மற்றும் ப்ளூ எல்இடி பேக்லைட்டுடன் 4K QLED டிஸ்பிளே உடன் இந்த டிவிகள் வெளிவந்தன.

குறிப்பாக லுமியோ விஷன் 7 சீரிஸ் மாடல்களில் 3840×2160 பிக்கசல்ஸ், 400 நிட்ஸ் பிரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10, எசஎல்ஜி (HLG), டால்பி விஷன் போன்ற டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக BOSS பிளாக்ஷிப் பிராசஸர் ஆதரவுடன் லுமியோ விஷன் 7 டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் டிவிகளில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியும் உள்ளது. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த லுமியோ விஷன் 7 டிவிகள் இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட பல ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

லுமியோ விஷன் 7 டிவிகளில் Damn குட் சவுண்ட் (DGS) ஆடியோ டியூனிங் ஆதரவு உள்ளது. மேலும் 43 இன்ச் கொண்ட லுமியோ விஷன் 7 மாடலில் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உள்ளது. மேலும் இதன் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவி மாடல்களில் டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் லுமியோ விஷன் 7 டிவிகளில் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. பின்பு DOPE பிக்சர் எஞ்சின் ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் அவுட், மினி ஏவி இன், ஈதர்நெட், புளூடூத் 5, வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளன லுமியோ விஷன் 7 மாடல்கள்.

இந்தியாவில் Lumio Vision டிவிகள் அறிமுகம்.. என்ன விலை?

லுமியோ விஷன் டிவிகளின் விலை:
55 இன்ச் கொண்ட லுமியோ விஷன் 9 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.59,999-ஆக உள்ளது.
43 இன்ச் கொண்ட லுமியோ விஷன் 7 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
50 இன்ச் கொண்ட லுமியோ விஷன் 7 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.
55 இன்ச் கொண்ட லுமியோ விஷன் 7 ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.

குறிப்பாக இந்த புதிய லுமியோ விஷன் டிவிகள் வரும் ஏப்ரல் 23-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 30 வரை இந்த டிவிகளை முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் லுமியோவிடமிருந்து 3 வருட வாரண்டியை (Warranty) பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lumio Vision 9, Vision 7 4K QLED TVs launched in India: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X