புரட்டி எடுக்கும் அமேசான்.. புத்தம் புது 55-இன்ச் TV மீது ரூ.6000 டிஸ்கவுண்ட்.. 50W சவுண்ட் சும்மா தெறிக்கும்!
அமேசான் பிரைம் டே (Amazon Prime Day) விற்பனை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், லுமியோ (Lumio) நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி மற்றும் புரொஜெக்டர் மாடல்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அமேசான் பிரைம் டே விற்பனை ஆனது ஜூலை 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி, ஜூலை 6 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை நடைபெற உள்ளது
இதன் ஒரு பகுதியாக, வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன்களை பயன்படுத்தி, லூமியோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஹை-எண்ட் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது லூமியோ விஷன் 9 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.6000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம். இதோடு லூமியோவின் ஆர்க் 5 (Arc 5) மற்றும் ஆர்க் 7 (Arc 7- புரொஜெக்டர்களையும் குறைக்கப்பட்ட விலையில் வாங்கலாம்.

எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வழியாக வாங்கும் போது கிடைக்கும் சலுகைகளின் விவரங்கள்: லூமியோ விஷன் 9 55-இன்ச் ஸ்மார்ட் டிவி: இதன் அசல் விலை ரூ.51,999 ஆகும். இதன் மீது ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் + ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஸ்மார்ட் டிவியின் விலையை ரூ.45,999 ஆக குறைக்க முடியும்.
இதேபோல லூமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் ஆனது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.1,750 பேங்க் டிஸ்கவுண்ட் + ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட்டின் கீழ் ரூ.16,249 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக லூமியோ ஆர்க் 7 ப்ரொஜெக்டர் ஆனது ரூ.31,499 க்கு பதிலாக ரூ.2,250 பேங்க் டிஸ்கவுண்ட் + ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட்டின் கீழ் ரூ.27,249 க்கு வாங்க கிடைக்கும்
மேலும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் - லூமியோ விஷன் 9 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்டுகளை பயன்படுத்தி 3, 6, 9 மற்றும் 12 மாதங்களுக்கான வட்டி இல்லா தவணை முறை (no-cost EMI) வசதியின் கீழும் வாங்கலாம். அதேசமயம், ஆர்க் 5 மற்றும் ஆர்க் 7 மாடல்களுக்கு 3 மற்றும் 6 மாதங்களுக்கான வட்டி இல்லா தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
லூமியோ விஷன் 9 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் முக்கிய அம்சங்கள்:
- EVA தொழில்நுட்பத்துடன் கூடிய 55 இன்ச் QD MiniLED பேனல்
- 7,000:1 நேட்டிவ் கான்ட்ராஸ்ட் (native contrast)
- 1,00,000:1 டைனமிக் கான்ட்ராஸ்ட்
- 800 நிட்ஸ் (nits) பீக் ப்ரைட்னஸ்
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டில் 4K, 240ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டில் 1080p மற்றும் VRR (48-240Hz) ஆதரவு
- வெறும் 9.7ms அளவிலான மிகக் குறைந்த 'இன்புட் லேக்' (input lag) செயல்திறன்
- மீடியாடெக் பென்டோனிக் 700 (MediaTek Pentonic 700) சிப்செட்
- 3GB DDR4 ரேம் மற்றும் வேகமான ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளம்
- முழு அலைவரிசை கொண்ட HDMI 2.1 (48Gbps) வசதி
- Dolby Vision, HDR10 மற்றும் HLG ஆதரவு
- 50W 2.2 DGS சிஸ்டம் மற்றும் ஆறு டிரைவர்கள் (இரண்டு சப்-வூஃபர்கள், ஃபுல்-ரேஞ்ச் டிரைவர்கள் மற்றும் ட்வீட்டர்கள்)
- 38Hz வரையிலான குறைந்த அதிர்வெண் ஒலியை வெளிப்படுத்தும் திறன்
ப்ரொஜெக்டர்களை பொறுத்தவரை, லூமியோவின் சீல் செய்யப்பட்ட ஆர்க்லைட் ஆப்டிகல் இன்ஜின் அடிப்படையிலான தூசி எதிர்ப்பு, ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன், அப்ஸ்டக்கில் அவாய்டென்ஸ், ப்ளூடூத் இணைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நெட்ஃபிளிக்ஸ் & கூகுள் டிவி ஆதரவு ஆகியவற்றுக்காக இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications