அறிமுகமானது புதிய Lumio 55-இன்ச் டிவிகள்.. டால்பி அட்மாஸ்.. 64ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் லுமியோ விஷன் 9 2026 ( Lumio Vision 9 2026) மற்றும் லுமியோ விஷன் 7 2026 (Lumio Vision 7 2026) மாடல்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவிகள் சற்று உயர்வான விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லுமியோ விஷன் 9 (2026) அம்சங்கள்: 55-இன்ச் லுமியோ விஷன் 9 (2026) மாடல் ஆனது மீடியாடெக் பிளாக்ஷிப் Pentonic 700சிப்செட் ( MediaTek's flagship Pentonic 700 chipset) உடன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

அதுவும் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது 55-இன்ச் லுமியோ விஷன் 9 (2026) மாடல். மேலும் இந்த டிவியில் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
பிளாக்ஷிப் QD MiniLED டிஸ்பிளே உடன் 55-இன்ச் லுமியோ விஷன் 9 (2026) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேட்டிவ் 4கே சப்போர்ட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இந்த 55 இன்ச் டிவியில் உள்ளன. அதேபோல் இந்த டிவியில் தரமான டால்பி அட்மாஸ் ஆடியோ (Dolby Atmos audio) செட்டப் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
லுமியோ விஷன் 7 (2026) அம்சங்கள்: லுமியோ விஷன் 7 (2026) 55-இன்ச் மாடல் ஆனது பிரீமியம் கியூஎல்இடி (premium QLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் டால்பி விஷன், எச்டிஆர் கலர், 450 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆடியோ செட்டப் உடன் இந்த லுமியோ விஷன் 7 (2026) மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (VRR), எம்இஎம்சி (MEMC) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த 55-இன்ச டிவியில் உள்ளன.

லுமியோ விஷன் 9 (2026) 55-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.51,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த டிவியை ரூ.44,999 விலையில் வாங்கிவிட முடியும்.
லுமியோ விஷன் 7 (2026) 55-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த டிவியை ரூ.34,999 விலையில் வாங்கிவிட முடியும்.
வரும் ஜூன் 4-ம் தேதி லுமியோ விஷன் 9 (2026) மற்றும் லுமியோ விஷன் 7 (2026) மாடல்கள் விற்பனைக்கு வரும். குறிப்பாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த புதிய டிவிகளை வாங்க முடியும். தரமான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications