Home
Gadgets

75 இன்ச் இல்ல.. 85 இன்ச் இல்ல.. பட்ஜெட்ல 100 இன்ச் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 16GB மெமரி.. எந்த மாடல்?

கூகுள் டிவி ஓஎஸ் மட்டுமல்லாமல், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, டால்பி ஆடியோ, 100 இன்ச் ப்ரொஜெக்சன், 16W ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் லுமியோ ஆர்க் 7 ப்ரொஜெக்டர் (Lumio Arc 7 Projector) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. மீடியாடெக் ப்ராசஸர், 400 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் போன்ற முக்கிய பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த லுமியோ ஆர்க் 7 மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லுமியோ நிறுவனமானது, லுமியோ ஆர்க் 7 மற்றும் லுமியோ ஆர்க் 5 ஆகிய ப்ரொஜெக்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் கிடைக்க இருக்கும் லுமியோ ஆர்க் 7 மாடலானது, ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. இதற்கு காரணம் டிவியை போலவே அனுபவம் கொடுக்கும்படி கூகுள் டிவி ஓஎஸ் கொடுத்து இருக்கிறது.

75 இன்ச் இல்ல.. 85 இன்ச் இல்ல.. பட்ஜெட்ல 100 இன்ச் டிஸ்பிளே.. மாடல்?

லுமியோ ஆர்க் 7 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Lumio Arc 7 Projector Specifications): இந்த மாடலில் 45 இன்ச் முதல் 100 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். இதில் 1080p (1920 x 1080) பிக்சல்கள் ரெசொலூஷன் மட்டுமல்லாமல், எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. மேலும், 400 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் (ANSI Lumens) கிடைக்கிறது. டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கிடைக்கிறது.

மேலும், வழக்கமாக கிடைக்கும் ஆடிடோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கிடைக்கிறது. மீடிடெக் நிறுவனத்தின் எம்டிகே 9630 (MTK 9630) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. ஆகவே, எல்இடி டிவிகளில் கிடைக்கும் யுஐ எதிர்பார்க்கலாம்.

இதன் மூலம் நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார், யூடியூப், பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5 மற்றும் ஆப்பிள் டிவி போன்ற முக்கிய ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக, கூகுள் போட்டோஸ் (Google Photos), கூகுள் காஸ்ட் (Google Cast) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்களின் சப்போர்ட் வருகிறது.

லாங்-டெர்ம் பிக்சர் குவாலிட்டி கொடுக்க ஆர்க்லைட் என்ஜின் (ArcLight Engine) கிடைக்கிறது. இந்த லுமியோ ஆர்க் 7 ப்ரொஜெக்டரில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 16W ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. இது 8W ஆடியோ அவுட்புட் கொடுக்கும் 2 பாசிவ் ரேடியேட்டர்களில் (Passive Radiators) கிடைக்கிறது. பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்க 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது.

இந்த ப்ரொஜெக்டரின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், டூயல் எச்டிஎம்ஐ (Dual HDMI), எச்டிஎம்ஐ ஏஆர்சி (HDMI ARC), யுபிஎஸ்பி 2.0 (USB 2.0) கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), டூயல் பேண்ட் வை-பை (Dual-Band Wi-Fi) போன்ற வயர்லெஸ் சப்போர்ட் உள்ளது. ஹாட்-கீஸ் சப்போர்ட் கொண்ட மினியன் நாய்ர் ரிமோட் (Minion Noir Remote) கிடைக்கிறது.

இந்த லுமியோ ஆர்க் 7 ப்ரொஜெக்டர் மாடலின் மார்கெட் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.29,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. ஜூலை 12ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த அறிமுக சலுகையானது, ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Lumio Arc 7 Projector With Google TV Launched India Sale From July 12 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X