வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.17,499 போதும்.. 100 இன்ச் புரொஜெக்டர்.. டால்பி ஆடியோ... 200 ஏஎன்எஸ்ஐ.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் லுமியோ ஆர்க் 5 புரொஜெக்டர் (Lumio Arc 5 Projector) விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் தளத்தில் அறிமுக சலுகை போக அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. 100 இன்ச் புரொஜெக்சன் மட்டுல்லாமல், டால்பி ஆடியோ, எச்டிஆர்10, 200 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் கொடுக்கிறது. எம்டிகே 9630 சிப்செட் கொண்ட இந்த லுமியோ ஆர்க் 5 புரொஜெக்டர் மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
100 இன்ச் டிஸ்பிளே மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டுமானால், இன்றைய மார்கெட் நிலவரப்படி ரூ.1.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும். ஆனால், அதைவிட கம்மியான அவுட்புட் போதும் என்றால், 100 இன்ச் ஸ்கிரீன் புரொஜெக்சன் கொடுக்கும் புரொஜெக்டர்களை ரூ.20,000 பட்ஜெட்டிலேயே வாங்கி கொள்ளலாம்.

இதில் டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், ஃபுல்எச்டி ரெசொலூஷன், எச்டிஆர்10, 2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ், கூகுள் அசிஸ்டன்ட் போன்ற நம்ப முடியாத பீச்சர்களையும் லுமியோ ஆர்க் 5 புரொஜெக்டர் கொடுக்கிறது. இந்தியாவில் விற்பனை தொடங்கிவிட்டது. அறிமுக சலுகையில் அடிமட்ட விலைக்கு கிடைப்பதால் வி்ற்பனை பின்னயெடுக்கிறது.
கூகுள் டிவி (Google TV) சர்டிபைடு மற்றும் நேட்டிவ் நெட்பிளிக்ஸ் (Netflix) கிடைக்கிறது. இதுபோக 11,000+ ஆப்களின் சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, இது கிட்டத்தட்ட கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட் டிவி அனுபவத்தை கஸ்டமர்களுக்கு கொடுக்கும். இதற்கு ஏற்ப மினிஆன் நோய்ர் ரிமோட் (Minion Noir Remote) கிடைக்கிறது. இதில் கூகுள் அசிஸ்டன்ட் பயன்படுத்தலாம்.
லுமியா டிஎல்டிஆர் ஆப் (Lumio TLDR App) மூலம் இந்த கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. டஸ்ட் ப்ரீ டியூரபிலிட்டி மற்றும் லாங்-டைம் கிளாரிட்டி கொடுக்க ஆர்க்லைட் என்ஜின் (ArcLight Engine) கிடைக்கிறது. இதுபோக ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, 1080p ரெசொலூஷனில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். இதுபோக எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது.
இதற்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் கொடுக்க டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 5W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 100 இன்ச் புரொஜெக்சன் செய்தாலும், அதில் எஸ்டிஆர்8 (STR8) ஆடிடோ கீரிஸ்டோன் கரெக்சன் (Auto-keystone Correction) மற்றும் அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கிடைக்கிறது. மேலும், டிஓஎப் சென்சாருடன் (TOF Sensor) ஆட்டோபோகஸ் கிடைக்கிறது.
ஆகவே, நீங்கள் ஆன் செய்த உடனடியாக பயன்படுத்தி கொள்ளலாம். போகஸ் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது கிடையாது. டிஎல்டிஆர் ஆப் மூலம் ஸ்போர்ட்ஸ் மற்றும் மியூசிக் பிரியர்களுக்கான டாஸ்போர்ட் கிடைக்கிறது. இதுவொரு போர்ட்பிள் புரொஜெக்டர் மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது. முக்கிய பீச்சர்களை பார்க்கலாம்.
லுமியோ ஆர்க் 5 புரொஜெக்டர் அம்சங்கள் (Lumio Arc 5 Projector Specifications): இந்த புரொஜெக்டரில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. டால்பி ஆடியோவுடன் டூயல் பேசிவ் ரேடியேட்டர்கள் கிடைக்கின்றன. 200 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் (ANSI Lumens) கிடைக்கிறது. 1.33 எடை கொடுக்கிறது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ அவுட் கிடைக்கிறது.
இதன் மார்கெட் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.2,500 விலை குறைப்பு போக ரூ.17,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இந்த லுமியோ ஆர்க் 5 புரொஜெக்டர் மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஒரு வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. பிளாக் கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








