Home
Gadgets

பழைய TV கதை முடிந்தது.. 100 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நிகரான பீச்சர்களை கொடுப்பது மட்டுமல்லாமல், அதைவிட மலிவான விலைக்கு லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் (Lumio Arc 5 Projector) கொடுக்கிறது. இப்போது, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) வழியாக ஆர்டர் செய்து கொள்ள கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்களில் உங்களது வீட்டுக்கு குட்டி ஹோம் தியேட்டர் மாடல் வந்துவிடும்.

இந்தியாவில் 10 நிமிடங்களில் மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் வாங்கி கொள்ளலாம். ஆனால், குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இந்த இன்ஸ்டாமார்ட் சேவை கிடைக்கும். இப்போது, லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் மாடலையும் ஹோம் டெலிவரி செய்கிறது. இது 4 நகரங்களில் மட்டுமே கிடைக்கும்.

பழைய TV கதை முடிந்தது.. 100 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. டால்பி ஆடியோ!

அதாவது. இப்போதைக்கு டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. இந்த லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டரின் விலை ரூ.18,499 ஆக இருக்கிறது. இதே விலைக்கு அமேசான் உள்ளிட்ட ஈ-கமர்ஸ் தளங்களிலும் கிடைக்கிறது. ஆனால், இதில் 10 நிமிடங்களில் வாங்கி கொள்ளலாம். சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Lumio Arc 5 Projector Specifications): 40 இன்ச் முதல் 100 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 1920 x 1080 ரெசொலூஷன் கொடுக்கப்படும். எல்இடி லைட் சோர்ஸ் (Light Source கிடைக்கிறது. 200 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர் 10 (HDR 10), எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கிடைக்கிறது.

டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. 16:9 நேட்டிவ் அஸ்பெக்ட் ரேசியோ கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் மாடல் கொடுத்து உள்ளது. ஆட்டோ ஸ்கிரீன் அலைன்மெண்ட் (Auto Screen Alignment) கொடுத்து உள்ளது. ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) மட்டுமல்லாமல் மேனுவல் கீஸ்டோன் (Manual Keystone) கிடைக்கிறது.

இதில் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone), அரிசோன்டல் கீஸ்டோன் (Horizontal Keystone) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) சப்போர்ட் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் டிஜிட்டல் கிஸ்டோன் (Digital Keystone) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, மல்டிபிள் ஆங்கிள்களிலும் ஸ்கிரீன் அலைன்மெண்ட் பக்காவாக இருக்கும்.

5W ஆடியோ அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர் கிடைக்கிறது. டிஜிஎஸ் ஆடியோ (DGS Audio) டியூனிங் மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் ஸ்பீக்கர் மோட் (Bluetooth Speaker Mode) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஆண்ட்ராய்டு 11 (Android 11) ஓஎஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட் பில்ட்-இன் (Google Assistant Built-in) மற்றும் கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google Cast Built-In) கிடைக்கிறது. மேலும், கூகுள் பிளே ஸ்டோர் உள்ளது. ஆகவே, நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். மீடியாடெக் 9630 (MediaTek 9630) சிப்செட்டை இந்த லுமியோ ஆர்க் 5 ப்ரொஜெக்டர் மாடல் கொடுத்து உள்ளது.

வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் வி5.1 (Bluetooth V5.1) கிடைக்கிறது. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் கிடை்ககிறது. எச்டிஎம்ஐ ஏஆர்சி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, அட்மோஸ் அவுட்புட் பெற்று கொள்ளலாம். கிட்டத்தட்ட ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகரான பீச்சர்களை கொடுத்துள்ளது. ஆனால், 100 இன்ச் டிவியை விட பல மடங்கு விலை கம்மியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lumio Arc 5 Projector With 100 inch Screen Available From Swiggy Instamart For 4 Major Cites
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X