மலிவு விலையில் அருமையான பாஸ் உடன் Lumiford பிளாக்ஸ்டோன் BT11 புளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்..
இசை பிரியர்களுக்கு ஒரு நாளில் ஒரு பாடலாவது கேட்டுவிட வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு பொழுது இனிதாய் முடிந்த திருப்தியே இருக்காது. இன்னும் சில இசை பிரியர்களுக்கு நல்ல பாடலை அற்புதமான ஒளிதரத்துடன் கேட்டால் மட்டுமே அந்த திருப்தி கிடைக்கும். இதற்கு அருமையான பாஸ் (bass) கொண்ட ஆடியோ ஸ்பீக்கர்களை பயன்படுத்த வேண்டும். இவை மலிவு விலையில் கிடைத்தால் வேண்டாம் என்ற கூறுவீர்கள்.

லுமிஃபோர்ட் பிளாக்ஸ்டோன் பிடி 11 புளூடூத் ஸ்பீக்கர்
இப்படியானவர்களின் தேவையை அறிந்து லுமிஃபோர்ட் நிறுவனம் தற்பொழுது மலிவு விலையில் புதிய பாக்கெட் சைஸ் ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. லுமிஃபோர்ட் பிளாக்ஸ்டோன் பிடி 11 புளூடூத் ஸ்பீக்கரை இந்தியாவில் நிறுவனம் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.

காம்பாக்ட் ஸ்பீக்கர்
இந்த உயர்திறன் கொண்ட மோனோ ஸ்பீக்கர் கருப்பு நிறத்தில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் லூமிஃபோர்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது. 180 கிராம் எடையுள்ள, காம்பாக்ட் ஸ்பீக்கரை இசை பயனுக்கும், வாய்ஸ் கால் அழைப்புகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ காலிங் மைக்
ஹேண்ட்ஸ் ஃப்ரீ காலிங் மைக், ஈஸி கேரி ஹூக், 40 மிமீ பாஸ் டிரைவர்கள், லாங் ப்ளே பேட்டரி ரன் மற்றும் 3.5 மிமீ ஆக்ஸ் இணைப்பு போன்ற அம்சங்களுடன் இந்த உயர் பாஸ் புளூடூத் ஸ்பீக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. பிளாக்ஸ்டோன் பிடி 11 மொபைல் அல்லது டேப்லெட் போன்ற எந்த ப்ளூடூத் சாதனத்துடனும் வயர்லெஸ் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.

விலை
புதிய லுமிஃபோர்ட் பிளாக்ஸ்டோன் பிடி 11 புளூடூத் ஸ்பீக்கர் 1800 mAH லித்தியம் அயன் பேட்டரி மூலம், இது 3.5 மணிநேர சார்ஜிங்கில் 15 மணி நேரம் இசை பயன்பாட்டை வழங்குகிறது. புளூடூத் வெர்ஷன் V5.0 உடன், ஸ்பீக்கரை எந்த சாதனத்தையும் 10 மீட்டர் இடைவெளியில் வரம்புடன் இணைக்க முடியும். இதன் ஸ்பீக்கர் 80Hz ~ 20KHz மற்றும் 95dB ± 3dB சென்சிட்டிவிட்டி அதிர்வெண் உடன் வெறும் ரூ. 1,999 என்று விலையில்வருகிறது.


Click it and Unblock the Notifications