Home
Gadgets

64-பிட் ஃபியூஷன் சிப்செட் வசதியுடன் ஆப்பிள் ஐபேட் அறிமுகம்.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபேட், மாணவர்களுக்கு 229 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.19,394), மற்ற வாடிக்கையாளர்களுக்கு 329 டாலர்களுக்கு வழங்கப்படுகிறது.

By Jijo Gilbert

குயோவின் சமீபகால ஆராய்ச்சி குறிப்பின்படி, ஆப்பிள் பென்சிலின் விற்பனை இந்தாண்டு 4-4.5 மில்லியனில் இருந்து 9-10 மில்லியனாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

64-பிட் ஃபியூஷன் சிப்செட் வசதியுடன் ஆப்பிள் ஐபேட்  அறிமுகம்.!

9.7-இன்ச் கொண்ட ஆப்பிள் ஐபேட் சாதனம் ஸ்பேஸ் கிரே, சில்வர், மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபேட் சாதனம் உடன் வரும் பென்சில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குயோவின் சமீபகால ஆய்வுக் குறிப்பின்படி, இந்தாண்டு ஆப்பிள் பென்சிலின் விற்பனை 4-4.5 மில்லியனில் இருந்து 9-10 மில்லியனாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரவுள்ள விலைக் குறைந்த ஐபேட், இந்த டிஜிட்டல் ஸ்டைலஸை ஆதரிக்கும் பட்சத்தில் மட்டுமே, மேற்கூறிய கூற்று சாத்தியமாகும். தற்போது பயன்பாட்டில் உள்ள 9.7-இன்ச் ஐபேட் ப்ரோ, 10.5-இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் 12.9-இன்ச் ஐபேட்டின் இரண்டு பதிப்புகள் ஆகியவை ஆப்பிள் ஸ்டைலஸை ஆதரிக்கின்றன.

குறிப்பாக இப்போது வெளிவந்துள்ள ஐபேட் சாதனத்தில் ஆசிரியர்கள் நேரடியாக பக்கங்களை மார்க் அப் செய்ய முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபேட்களுக்கான கிரேயான் ஒன்றை லாகிடெக் உருவாக்கி வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

64-பிட் ஃபியூஷன் சிப்செட் வசதியுடன் ஆப்பிள் ஐபேட்  அறிமுகம்.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஐபேட் சாதனத்தில் 64-பிட் ஃபியூஷன் சிப்செட் வசதி மற்றும் எம்10 செயலியைக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புளூடூத் 4.2. மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் டச் ஐடி, ஹெச்டி ஃபேஸ் டைம் கேமரா போன்ற அம்சங்களும் இதனுடன் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 10 மணி நேர பேட்டரி பேக்கப் வசதி கொண்டுள்ளது இந்த ஐபேட் சாதனம்.

64-பிட் ஃபியூஷன் சிப்செட் வசதியுடன் ஆப்பிள் ஐபேட்  அறிமுகம்.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபேட், மாணவர்களுக்கு 229 டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.19,394), மற்ற வாடிக்கையாளர்களுக்கு 329 டாலர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின்பு ஐபேட் உடன் வரும் பென்சில் விலை 89 டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விற்பனை அடுத்த வாரம் முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

கடந்த சில ஆண்டுகளாக ஐபேட்களின் விற்பனையில் ஏற்பட்ட கடும் சரிவை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் கடும் அதிர்ச்சி அடைந்தது. எனவே விற்பனை எண்ணிக்கையை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக, ஒரு விலைக் குறைந்த ஐபேடை இந்நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது ஒரு சிறந்த முடிவு ஆகும்.

Best Mobiles in India

English summary
Low cost 9 7 inch iPad could support Apple Pencil Stylus; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X