Home
Gadgets

கம்மி விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த பிரபலமான நிறுவனம்: நம்பி வாங்கலாம்.!

இந்தியாவில் போட் நிறுவனத்தின் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதாவது இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது போட் நிறுவனம்.

அதாவது வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் அறிமுகம் செய்து அதிரடி காட்டியுள்ளது போட் நிறுவனம். இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் தனித்துவமான மெட்டாலிக் டிசைன் மற்றும் மென்மையான சிலிகான் ஸ்டிராப்களை கொண்டுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போட் நிறுவனம்.

கம்மி விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த போட்.!

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்வாட்ச் மாடலின் சிலிகான் ஸ்டிராப்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியைக் கொண்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே
அதேபோல் போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.83 இன்ச் எச்டி 2.5டி வளைந்த டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 240x280 பிக்சல்ஸ், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். குறிப்பாக இது பிரீமியம் மெட்டல் டிசைன் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

கம்மி விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த போட்.!

ஸ்போர்ட்ஸ் மோட்கள் ?
ஹார்ட் ரேட், SpO2, ஆக்டிவிட்டி டிராக்கர் போன்ற முக்கிய சிறப்பு அம்சங்களைக் கொண்டு இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. அதேபோல் 10-க்கும் அதிக ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டுள்ளது இந்த போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டுள்ளது இந்த போட் ஸ்மார்ட்வாட்ச்.

ஸ்மார்ட் அலெர்ட்கள் கொண்டு இந்த போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 240 எம்ஏஎச் பேட்டரி வசதி இதில் உள்ளது. குறிப்பாக இதை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை 2 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிட முடியும்.

என்ன விலை?
ஆக்டிவ் பிளாக், செர்ரி பிளாசம் மற்றும் டீப் புளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அறிமுக சலுகையாக இந்த போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ.1499-விலையில் வாங்க முடியும். போட் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மி விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த போட்.!

போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு ஒரு வருட வாரண்டி உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் அசத்தலான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதேபோல் போட் நிறுவனம் இந்த வருடம் பல அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking for a smartwatch that offers 7 days of battery life? Then check out this new boAt Wave Flex Connect : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X