ஆண்டு இறுதியில் அசத்தலான Smartwatch-ஐ கம்மி விலையில் அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.!
நாய்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது நாய்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதலில் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம். அதாவது நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.78-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு சதுரங்க வடிவம் கொண்ட டயல், 368x448 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட் வாட்ச் வெளிவந்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பால்ம் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு எளிமையாக டிஸ்பிளேவை ஆஃப் செய்ய முடியும். அதாவது கைகளை ஸ்கிரீன் மீது வைத்தாலே போதுமானது. இதுதவிர டேப்-டு-வேக் அம்சம் மூலம் ஸ்கீரின் மீது ஒரே கிளிக் செய்தால் ஸ்கிரீனை எளிமையாக ஆன் செய்துவிடலாம்.
குறிப்பாக இந்த நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வலது புறத்தில் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ளதைப் போன்ற டிஜிட்டல் கிரவுன் இடம்பெற்றுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இதயத் துடிப்பு சென்சார், SpO2 சென்சார், மென்ஸ்டுரல் சைக்கில் மாணிட்டர், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் டிராக்கர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் மற்றும் ப்ளூடூத் 5.3 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நாய்ஸ் ஸ்மார்ட் ஸ்மார்ட்வாட்ச்.
புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இதுதவிர பங்கு சந்தை அப்டேட்கள், நோட்டிஃபிகேஷன், வானிலை அப்டேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல்.
Noise ColorFit Pro 4 Alpha ஸ்மார்ட்வாட்ச் மாடல் பிளாக், பின்க், புளூ, வைன் மற்றும் Teal நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.3,799-ஆக உள்ளது. வரும் டிசம்பர் 28-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரூ.4,000-க்கு கீழ் ஒரு அருமையான புதிய ஸ்மார்ட்வாட்ச் வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்குவது நல்லது. அதாவது அனைத்து அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் அடுத்த வருடம் இன்னும் பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது நாய்ஸ் நிறுவனம்.


Click it and Unblock the Notifications