திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது லேட்டஸ்ட் பட்ஜெட்-விலை ஸ்மார்ட் வாட்ச் ஒன்றின் மீது திடீர் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய விலை மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? அது எப்போது அறிமுகமானது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

அதென்ன வாட்ச்?
திடீர் விலைக்குறைப்பை பெற்றுள்ளது ஒன்பிளஸ் பிராண்டின் கீழ் அறிமுகமான பட்ஜெட்-விலை ஸ்மார்ட் வாட்ச் ஆன - ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் (OnePlus Nord Watch) ஆகும்.
நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலையை குறைத்துள்ளது!

OnePlus Nord Watch-ன் பழைய விலை மற்றும் புதிய விலை என்ன?
ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் மீது ரூ.500 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் ரூ.4,999 என்கிற விலைக்கு இந்தியாவில் அறிமுகமானது.
தற்போது ரூ.500 என்கிற விலைக்குறைப்பிற்கு பின்னர் ரூ.4,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது மிட்நைட் பிளாக் மற்றும் டீப் ப்ளூ என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

விலைக்குறைப்பு மட்டும்தானா... வேறு எந்த சலுகையும் கிடையாதா?
உண்டு! ரூ.500 என்கிற விலைக்குறைப்புடன் சேர்த்து ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் மீது மேலும் சில சலுகைகளும் அணுக கிடைக்கிறது.
நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்ட்டை (ICICI Credit Card) பயன்படுத்தி ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச்சை வாங்கினால், உங்களுக்கு கூடுதலாக ரூ.500 என்கிற உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் மொபிக்விக் வேலட் (MobiKwik Wallet) வழியாக பணம் செலுத்தினால், அப்போதும் உங்களுக்கு ரூ.500 என்கிற கேஷ்பேக் கிடைக்கும். இப்படியாக நீங்கள் ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச்சை ரூ.3,999 க்கு வாங்க முடியும்!

ரூ.3,999 க்கு OnePlus Nord Watch வொர்த்-ஆ?
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கண்டிப்பாக வொர்த் ஆன ஸ்மார்ட் வாட்ச் தான்!
ஏனென்றால், இந்தியாவில் ரூ.5,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட் வாட்ச்கள் (Best Smart Watch Under Rs.5,000 in India) என்கிற பட்டியலில் கண்டிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச்சிற்கு - எப்போதுமே - ஒரு இடம் உண்டு!
மேலும் இது, கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஏற்ற அம்சங்களை வழங்குகிறது என்பதிலும் சந்தேகம் வேண்டாம்!

OnePlus Nord Watch என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?
- 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 1.78-இன்ச் அளவிலான AMOLED டிஸ்ப்ளே
- மதிய நேர சூரிய ஒளியையும் கூட சமாளிக்க வல்ல 500 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் ஐஓஎஸ் 11 மற்றும் அதற்கு மேற்பட்டவற்ற வெர்ஷன்களுடன் இணக்கமானதாக இருக்கும்
- அணிந்து இருப்பவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் (இதயத் துடிப்பு, மன அழுத்தம், ப்ளட் ஆக்ஸிஜன் லெவல் மற்றும் பலவற்றை) கண்காணிக்கும்
- 105 ஃபிட்னஸ் மோட்களுடன் வருகிறது
- சிங்கிள் சார்ஜில் 10 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் / 30 நாட்கள் ஸ்டேண்ட்பை டைம்-ஐ வழங்கும்
- ப்ளூடூத் 5.2 வெர்ஷன் உடன் வருகிறது
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 (IP68) சான்றிதழை பெற்றுள்ளது.
Photo Courtesy: OnePlus


Click it and Unblock the Notifications








