Home
Gadgets

நிக்காம ஆர்டர் விழுது.. பாதிக்கு பாதி விலையில் Redmi ஸ்மார்ட் TV.. மெட்டல் டிசைன், 20W ஸ்பீக்கர்ஸ் வேற!

ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.13,000 க்குள் ஒரு நல்ல 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை தேடிக்கொண்டு இருப்பவர்களை குறிவைத்து, அமேசான் இந்தியா வலைத்தளமானது, ஒரு பிரபலமான ரெட்மி ஸ்மார்ட் டிவியை பாதி விலைக்கு விற்பனை செய்கிறது!

அதென்ன டிவி? அமேசான் வலைத்தளத்தில் 50% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது - ரெட்மி எஃப் சீரீஸின் கீழ் வெளியான 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (Redmi 32-inch HD Ready Smart LED Smart TV) மாடல் தான்!

நிக்காம ஆர்டர் விழுது.. பாதிக்கு பாதி விலையில் Redmi ஸ்மார்ட் TV!

தற்போது இது அமேசான் வலைத்தளம் வழியாக 50% தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. பெயர் குறிப்பிடுவது போலவே, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடைந்தன எச்டி ரெடி (1366x768) ரெசல்யூஷன் ஸ்மார்ட் டிவியாகும்.

மேலும் இது டால்பி ஆடியோ, டிடிஸ் விர்ச்சுவல்: எக்ஸ், டிடிஎஸ்-எச்டி உடனான 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. பில்ட்-இன் ஃபயர் டிவி உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவியானது ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், யூட்யூப் உட்பட ஆப் ஸ்டோரிலிருந்து 12000 க்கும் மேற்பட்ட ஆப்களுக்கான ஆதரவை கொண்டுள்ளது.

நிக்காம ஆர்டர் விழுது.. பாதிக்கு பாதி விலையில் Redmi ஸ்மார்ட் TV!

அலெக்சா ஆதரவு உடனான வாய்ஸ் ரிமோட் உடன் வரும் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியானது குவாட் கோர் ஏஆர்எம் கோர்டெக்ஸ்-ஏ35 சிபியு, 1ஜிபி ரேம் + 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டு இயங்கும். கூடவே இதில் டிஸ்ப்ளே மிரரிங் - ஏர்ப்ளே & மிராகாஸ்ட் அம்சங்களும் உள்ளன.

பிரீமியம் மெட்டல் பெசல்லெஸ் டிசைன் (Premium Metal Bezel-less Design) உடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவிக்கு 1 ஆண்டு விரிவான உத்தரவாதமும், டெலிவரி செய்யப்பட்ட தேதியிலிருந்து பேனலின் மீதான 1 வருடம் கூடுதல் உத்தரவாதமும் கிடைக்கும் (இது ரெட்மி பிராண்ட்டிடம் இருந்து கிடைக்கும்).

நிக்காம ஆர்டர் விழுது.. பாதிக்கு பாதி விலையில் Redmi ஸ்மார்ட் TV!

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் டூயல் பேண்ட் வைஃபை, செட் டாப் பாக்ஸ், கேமிங் கன்சோல்கள், டிவிடி அல்லது ப்ளூ-ரே பிளேயர்களை இணைக்க 2 எச்டிஎம்ஐ போர்ட்கள், ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற யூஎஸ்பி டிவைஸ்களை இணைக்க 2 யூஎஸ்பி போர்ட்கள், ப்ளூடூத் 5.0, ஈதர்நெட், 3.5மிமீ இயர்போன் ஜாக் போன்றவைகளை கொண்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை தேடுகிறீர்களா? ஆமென்றால், இதே ரெட்மி எப் சீரீஸின் கீழ்.. ஆபர் விலையில் கிடைக்கும் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மாடலை கருத்தில் கொள்ளலாம். தற்போது இது அமேசான் வலைத்தளம் வழியாக 42% தள்ளுபடியை பெற்று ரூ.42,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரெட்மி இந்த 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியானது (Redmi 43-inch 4K Ultra HD LED Smart TV) ஆனது 4கே எச்டிஆர் டிஸ்பிளே, பில்ட்-இன் ஃபயர் டிவி, பிரீமியம் மெட்டல் பெசல்லெஸ் டிசைன், விவிட் பிக்சர் எஞ்சின், டால்பி ஆடியோ உடனான 24வாட்ஸ் ஸ்பீக்கர்ஸ், ஏர்ப்ளே மற்றும் மிராகாஸ்ட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பவில்லையா? ஆமென்றால்.. அமேசானில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் டிசிஎல் 40-இன்ச் பெசல்-லெஸ் எஸ் சீரிஸ் எப்எச்டி ஸ்மார்ட் டிவியை (TCL 40-inches Bezel-Less S Series Full HD Smart Android LED TV) வாங்கலாம். இது ரூ.18,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல ஐஃபால்கான் நிறுவனத்தின் 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (iFFALCON 43-inch 4K Ultra HD Smart LED Google TV) மாடலையும் கூட நீங்கள் தேர்வு செய்யலாம். தற்போது இது அமேசான் வலைத்தளம் வழியாக 60% தள்ளுபடியை பெற்று ரூ.49,990 க்கு பதிலாக ரூ.19,900 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking for Best 32 inch TV Under Rs 15000 This Redmi HD LED TV Gets 50 Percentage Offer On Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X