நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துவிடுகின்றன. அதுவும் ஆப்பிள் வாட்ச் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான தொழில்நுட்ப வசதிகளுடன் போட், பிடிரான், ஃபாஸ்ட் டிராக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்கின்றன.
ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா
இந்நிலையில் பிரபலமான ஃபயர் போல்ட்(Fire Boltt) நிறுவனம் கூட ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

சூப்பர் டிஸ்பிளே
இப்போது ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.39-இன்ச் கலர் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 240×240 ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்.
ப்ளூடூத் வசதி
ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது இன்பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்குகிறது. அதேபோல் ப்ளூடூத் 5.0 வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா முக்கிய அம்சங்கள்
புதிய ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் barometer, gyro sensor, உள்ளிட்ட பல சென்சார் வசதி உள்ளன. குறிப்பாக இந்த அனைத்து அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

பாதுகாப்பு வசதி?
குறிப்பாக ரன்னிங், சைக்கிள், ஜாக்கிங் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 123 விளையாட்டு முறைகளை (sports modes)வழங்குகிறது ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச். பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்டர் ரெசிஸ்டென்ட், டஸ்ட் எதிர்ப்புத் தன்மையை உறுதி செய்யும் வகையிலான IP68 மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம்.
நோட்டிஃபிகேஷன் ?
அதேபோல் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்மார்ட்போனை விரைவாக கட்டுப்படுத்தலாம். பின்பு வானிலை மற்றும் பங்குச் சந்தை அப்டேட்கள், நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, ரிமோட் கேமரா, மியூசிக் கண்ட்ரோல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

சிறந்த பேட்டரி பேக்கப்
புதிய ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இணைத்துப் பயன்படுத்தலாம். பின்பு சிரி மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆகியவற்றையும் இதில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறுகிறது.
ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா விலை
கருப்பு, நீலம், சிவப்பு, கிரே, பிங்க் உள்ளிட்ட நிறங்களில் இந்த புதிய ஃபயர் போல்ட் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.1999-ஆக உள்ளது. பிளிப்கார்ட் இணையதளத்தில் ஃபயர் போல்ட் டாக் அல்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஃபயர் போல்ட் நிறுவனம் கூடிய விரைவில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் பல அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








