Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. Half Rate இல் வாங்க கிடைக்கும் 55-இன்ச் Google ஸ்மார்ட் TV.. அமேசானுக்கு ஓ!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale 2025) ஆனது வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையின் போது என்னென்ன ஸ்மார்ட் டிவிகள் மீது மிகபெரிய டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்கிற (Best Deals on Smart TVs) விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக 50 இன்ச், 55 இன்ச், 75 இன்ச் அளவிலான ஸ்மார்ட் டிவிகள் மீது "கிட்டத்தட்ட" பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கும். வழக்கம் போல அமேசான் பிரைம் மெம்பர்கள் (Amazon Prime Members) இந்த விற்பனையானது செப்.23 ஆம் தேதி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே சலுகைகளை அணுக முடியும்.

Half Rate இல் வாங்க கிடைக்கும் 55-இன்ச் Google ஸ்மார்ட் TV!

மேலும் நேரடி தள்ளுபடி விலைகளுக்கு கூடுதலாக எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் வரவிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலின் போது 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் இஎம்ஐ (EMI) பரிவர்த்தனைகளிலும் கூடுதல் நன்மைகளை பெறலாம்.

கூப்பன்கள் அல்லது எக்ஸ்சேன்ஜ் சலுகைகளின் வழியாக நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் டிவியின் இறுதி விலையை "முடிந்தவரை" குறைக்கவும் முடியும். சரி என்னென்ன நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளின் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும்? அவைகளின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:

55 இன்ச் சோனி பிராவியா 2 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (55 inch Sony Bravia 2 4K Ultra HD Smart LED Google TV): இது அசல் விலையான ரூ.99,990 க்கு பதிலாக ரூ.44,910 தள்ளுபடியை பெற்று ரூ.54,990 க்கு வாங்க கிடைக்கும்.

55 இன்ச் சாம்சங் டி சீரிஸ் பிரைட்டர் கிரிஸ்டல் 4கே விவிட் ப்ரோ அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (55 inch Samsung D Series Brighter Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV): இது அசல் விலையான ரூ.68,990 க்கு பதிலாக ரூ.29,000 தள்ளுபடியை பெற்று ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கும்.

55 இன்ச் வு க்ளோக்யூஎல்இடி சீரிஸ் 4கே க்யூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (55 inch Vu GloQLED Series 4K QLED Smart Google TV): இது அசல் விலையான ரூ.50,000 க்கு பதிலாக ரூ.16,510 தள்ளுபடியை பெற்று ரூ.33,490 க்கு வாங்க கிடைக்கும்.

50 இன்ச் ஷாவ்மீ எக்ஸ் சீரிஸ் 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (50 inch Xiaomi X Series 4K LED Smart Google TV): இது அசல் விலையான ரூ.49,999 க்கு பதிலாக ரூ.23,000 தள்ளுபடியை பெற்று ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கும்.

75 இன்ச் டிசிஎல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (75 inch TCL 4K Ultra HD Smart QLED Google TV): இது அசல் விலையான ரூ.2,58,900 க்கு பதிலாக ரூ.1,96,901 தள்ளுபடியை பெற்று ரூ.61,999 க்கு வாங்க கிடைக்கும்.

75 இன்ச் டிசிஎல் மெட்டாலிக் பெசல்-லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (75 inch TCL Metallic Bezel-Less Series 4K Ultra HD Smart LED Google TV): இது அசல் விலையான ரூ.2,54,900 க்கு பதிலாக ரூ.1,92,910 தள்ளுபடியை பெற்று ரூ.61,990 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For 55 inch Smart TV Offers in Amazon Sale 2025 Do Not Miss These Best Google TV Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X