Home
Gadgets

இரண்டு 4கே ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Vu.! பட்ஜெட் விலை.! அட்டகாசமான அம்சங்கள்.!

இந்தியாவில் தற்போது 4கே ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 4கே ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மிகவும் பிரபலமான Vu நிறுவனம் இரண்டு அசத்தலான 4கே ஸமார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது Vu நிறுவனம் இந்தியாவில் Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் மாடல்களை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் ஆனது 43-இன்ச் மற்றும் 55-இன்ச் என்ற இருவித அளவுகளில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 இரண்டு 4கே ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Vu.!

அம்சங்கள்: Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் 43-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்கள் 4கே எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. பின்பு 3840x2160 பிக்சல்ஸ், A+கிரேட் 400 நிட்ஸ் பிரைட்னஸ் பேனல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் மூன்று புறம் ஃபிரேம்லெஸ் டிசைன் வசதி உள்ளது. பின்பு இந்த 43-இன்ச் மற்றும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் முன்புறத்தில் சவுண்டபார் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டிவிகள் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 50 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக 64-பிட் குவாட் கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 4-கோர் சிபியு மற்றும் சக்திவாய்ந்த ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள்.

 இரண்டு 4கே ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Vu.!

இந்த Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் மாடல்கள் கூகுள் டிவி ஓஎஸ் மூலம் இயங்குகிறது. அதேபோல் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி எனப் பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட் டிவிகள். மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் வாய்ஸ் ரிமோட் வசதியை கொண்டுள்ளன. குறிப்பாக Vu ரிமோட் கண்ட்ரோல்-இல் பில்ட்-இன்ச் மைக்ரோபோன் வசதி உள்ளது. இது கூகுள் அசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. மேலும் இந்த Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் மாடல்கள் டிஜிட்டல் நாய்ஸ் ரிடக்ஷன், டைனமிக் காண்டிராஸ்ட், கேம் மோட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை நம்பி வாங்கலாம்.

 இரண்டு 4கே ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Vu.!

என்ன விலை? வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன்புட், ஈத்தர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட் டிவிகள். அதேபோல் Vu பிரீமியம் டிவி 2023 எடிஷன் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. பின்பு இதன் 55-இன்ச் மாடலின் விலை ரூ.32,999-ஆக உள்ளன. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இந்த ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking for 4K Smart TVs at budget price? Then check out new Vu Premium TV 2023 Edition models : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X