அமேசானில் செம்ம டிமாண்ட் ஆகும் 43-இன்ச், 55-இன்ச் SAMSUNG TV.. ரூ.11000, ரூ.14,000 விலை குறைச்சா யாரு விடுவா!
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் அமேசான் மெகா டீல் (Amazon Mega Deal) என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் சாம்சங் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி (Samsung 43-inch Smart TV) ஒன்றின் மீது நேரடியாக ரூ.11,000 தள்ளுபடி கிடைக்கிறது.
எந்த மாடல்? ரூ.11,000 தள்ளுபடி உடன் வாங்க கிடைப்பது சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43-inch Crystal 4K Vista Ultra HD Smart LED TV - UA43UE81AFULXL) மாடல் ஆகும்.

அசல் விலை VS ஆபர் விலை: சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.39,500 ஆகும். ஆனால் அமேசான் இந்தியாவில் தற்போது இது 28% நேரடி தள்ளுபடியின் கீழ் ரூ.28,490 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.11,000 நேரடி விலைக்குறைப்பை குறிக்கிறது.
சுவாரசியமாக இதே ஸ்மார்ட் டிவி மாடலின் 55-இன்ச் வேரியண்ட்டும் நல்ல ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. ஆக 43-இன்ச் மாடலை விட சற்றே பெரிய மாடலை வாங்க நினைப்பவர்கள் 55-இன்ச் டிவியை கருத்தில் கொள்ளலாம். இது அசல் விலையான ரூ.55,200 க்கு பதிலாக ரூ.40,990 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி முக்கிய அம்சங்கள்:
- 4K அல்ட்ரா HD (3840 x 2160) ரெசல்யூஷன்
- 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- கிரிஸ்டல் பிராசஸர் 4கே
- HDR10+ ஆதரவு
- ப்யூர் கலர்
- 4கே அப்ஸ்கேலிங்
- கலர் பூஸ்டர்
- மெகா கான்ட்ராஸ்ட்
- கான்ட்ராஸ்ட் என்ஹான்சர்
- HLG (ஹைப்ரிட் லாக் காமா)
- UHD டிம்மிங்
- மோஷன் எக்ஸலரேட்டர்
- HDMI பிளாக் லெவல்
- ஃபிலிம் மோட்
- ஃபிலிம்மேக்கர் மோட்
- செட்-டாப் பாக்ஸ்/DTH, சவுண்ட்பார், ஹோம் தியேட்டர், கேமிங் கன்சோல் மற்றும் பலவற்றை இணைக்க 3 HDMI போர்ட்கள்
- ஹார்டு டிரைவ்கள் மற்றும் பிற USB-இணக்கமான சாதனங்களை எளிதாக அணுக 1 USB-A போர்ட்
- வைஃபை 5, ப்ளூடூத் 5.2, மற்றும் HDMI eARC
- நிலையான வயர்டு இணையத்திற்காக ஒரு ஈதர்நெட் லேன் போர்ட்
- சக்திவாய்ந்த 20W சவுண்ட் அவுட்புட்
- க்யூயோ-சிம்பொனி
- ப்ளூடூத் ஆடியோ
- அலெக்ஸா / கூகுள் அசிஸ்டென்ட்
- மொபைல் டூ டிவி மிரரிங்
- சவுண்ட் மிரரிங்
- வயர்லெஸ் டிவி ஆன்
- ஏர்பிளே மூலம் ஆப்பிள் சாதனங்களை இணைக்கும் ஆதரவு
- வாங்கிய தேதியிலிருந்து 1 வருட உற்பத்தியாளர் உத்தரவாதம் மற்றும் பேனலுக்குக் கூடுதலாக 1 வருட உத்தரவாதம், ரிமோட் கண்ட்ரோலுக்கு 12 மாத உத்தரவாதம்
இந்தியாவில் அறிமுகமான லேட்டஸ்ட் சாம்சங் டிவி மாடல்கள்: கடந்த மே மாத இறுதியில், சாம்சங் நிறுவனமானது, இந்தியாவில் அதன் 2026 விஷன் ஏஐ டிவி லைன்அப்பை (2026 Vision AI TV Lineup) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மைக்ரோ ஆர்ஜிபி, ஓஎல்இடி, நியோ க்யூஎல்இடி, தி ஃபிரேம், மினி எல்இடி மற்றும் யுஎச்டி என பல வகையான ஸ்மார்ட் டிவி மாடல்கள் அடங்கும்.
இந்த அறிமுகத்தின் மூலம், சாம்சங் தனது அனைத்து மாடல்களிலும் ஏஐ-பவர்டு அம்சங்களை (AI-powered features) விரிவுபடுத்துகிறது. மேலும் இதன்மூலம், இந்தியாவில் உள்ள அதிகமான நுகர்வோருக்கு மேம்பட்ட பிக்சர் (Smarter picture), சவுண்ட் மற்றும் பெர்சனலைஸ்டு வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை (Personalized viewing experiences) வழங்குகிறது.
சாம்சங்கின் மைக்ரோ ஆர்ஜிபி மாடல்களின் (Samsung's Micro RGB range) விலை ரூ.1,24,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் ஓஎல்இடி மாடல்களின் (Samsung's OLED range) விலை ரூ.1,14,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் ஃபிரேம் டிவி மாடல்களின் (Samsung's Frame TV range ) விலை ரூ.56,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் நியோ க்யூஎல்இடி மாடல்களின் (Samsung's Neo QLED range) விலை ரூ.52,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் மினி எல்இடி மாடல்களின் (Samsung's Mini LED range) விலை ரூ.42,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் யுஎச்டி டிவி மாடல்களின் (Samsung's UHD TV range) விலை ரூ.36,990 முதல் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications