ஒருவழியா வந்துடுச்சு! பட்ஜெட் விலையில் இப்படி ஒரு 43-இன்ச் 4K TV-க்கு பல பேர் வெயிட்டிங்!

|

புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பெரும்பாலான மக்களின் கவனம், 43-இன்ச் மாடல்களின் மீதே உள்ளது.

"அந்த பட்டியலில்" நீங்களும் ஒருவர் என்றால், இன்னும் குறிப்பாக நீங்கள் ஒரு நல்ல 4கே டிவியை (4K TV) தேடுகிறீர்கள் என்றால்.. இந்த தீபாவளி உங்களுடையது தான்!

32 இன்ச் வேண்டாம்.. 55 இன்ச்சும் வேண்டாம்!

32 இன்ச் வேண்டாம்.. 55 இன்ச்சும் வேண்டாம்!

32-இன்ச் என்பது மிகவும் சிறிய அளவிலான டிவியாகி விட்டது. அதே சமயம் 55-இன்ச் என்பது பட்ஜெட்டை மீறும் ஒரு "அளவாக" இருக்கிறது.

எனவே தான் பெரும்பாலான மக்கள் 43-இன்ச் என்கிற டிவி ஸ்க்ரீன் சைஸின் (TV Screen Size) மீது குறியாக உள்ளனர். அதை நன்கு புரிந்துகொண்ட டிவி தயாரிப்பு நிறுவனங்கள், பட்ஜெட் விலையிலான 43-இன்ச் டிவி மாடல்களை களமிறக்கி வருகின்றன!

இந்த தீபாவளி முடிவதற்குள் Google-ல் இந்த தீபாவளி முடிவதற்குள் Google-ல் "இதை" டைப் செய்தால்.. ஒரு அதிசயம் நடக்கும்!

வெறும் 4K TV அல்ல.. அல்ட்ரா எச்டி 4கே எல்இடி டிவி!

வெறும் 4K TV அல்ல.. அல்ட்ரா எச்டி 4கே எல்இடி டிவி!

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையின், 43-இன்ச் டிவி சீரீஸின் கீழ் புதிதாக நுழைந்துள்ள ஒரு டிவி தான் - காம்பேக் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Compaq Ultra HD 4K LED Smart Android TV)!

இந்த டிவியின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதே விலையின் கீழ் வேறு என்னென்ன டிவிகளை வாங்கலாம்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

டிஸ்பிளே - இதுக்கு மேல வேற வேண்டும்?

டிஸ்பிளே - இதுக்கு மேல வேற வேண்டும்?

காம்பேக் நிறுவனத்தின் இந்த புதிய 43-இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ஆனது 3840x2160 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளேவானது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் பேக் செய்கிறது.

இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!இறங்கி அடிக்கும் சீன கம்பெனி.. வெறும் ரூ.6,999 க்கு இப்படி ஒரு Phone-ஆ!

நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் பல!

நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் பல!

இந்த ஸ்மார்ட் டிவி Netflix, Amazon Prime Video, Disney + Hotstar மற்றும் YouTube போன்ற OTT இயங்குதளங்களையும் ஆதரிக்கிறது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ஐ கொண்டு இயங்கும் இந்த காம்பேக் ஸ்மார்ட் டிவி ஆனது கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மற்றும் குரோம்காஸ்ட்டிற்கான (Chromecast) ஆதரவையும் கொண்டுள்ளது.

பெஸல்லெஸ் டிசைன் மற்றும் மெட்டல் பாடி!

பெஸல்லெஸ் டிசைன் மற்றும் மெட்டல் பாடி!

இந்த டிவியை பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். இது பெஸல்லெஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது, உடன் மெலிதான டிசைன் மற்றும் மெட்டல் பாடியையும் பேக் செய்கிறது.

மேலும் இந்த டிவியில் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டெபிலைசேஷன் எஞ்சின் (Experience Stabilisation Engine) உள்ளது, இது ஒரு அதிநவீன அல்காரிதத்தை பயன்படுத்துகிறது.

இது உங்களுக்கு ஒரு மென்மையான விஷூவல் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது மற்றும் திரையில் ஒரு "பொருள்" வேகமாக நகரும் போதும் கூட அது மங்கலாக தெரியாதபடி பார்த்துக்கொள்கிறது.

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

5.1 சரவுண்ட் சவுண்ட்!

5.1 சரவுண்ட் சவுண்ட்!

இந்த லேட்டஸ்ட் காம்பேக் ஸ்மார்ட் டிவியில் உள்ள Chromecast ஆதரவானது, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கன்டென்ட்-ஐ டிவி ஸ்க்ரீனில் பிரதிபலிக்கும்.

மேலும் இந்த டிவி ஒரு டால்பி ஆடியோ டிகோடரை (Dolby Audio Decoder) கொண்டுள்ளது, இது சவுண்ட் குவாலிட்டியை மேம்படுத்துகிறது மற்றும் 5.1 சரவுண்ட் சவுண்டை வழங்குகிறது; நிறுவனத்தின் கூற்றுப்படி, இது தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்கும்.

என்ன விலை?

என்ன விலை?

இந்தியாவில், காம்பேக் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் அல்ட்ரா HD 4K LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது ரூ.17,499 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது Flipkart வழியாக விற்பனை செய்யப்படுகிறது!

ஒருவேளை நீங்கள் இதே விலையின் கீழ் (அதாவது ரூ.20,000 க்குள்) வாங்க கிடைக்கும் மற்ற நிறுவனங்களின் டிவிகளை தேடினால்.. கீழ்வரும் ஸ்மார்ட் டிவி மாடல்களை கருத்தில் கொள்ளலாம்!

உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

இந்தியாவில் ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவிகள்:

இந்தியாவில் ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவிகள்:

கோடாக் 43-இன்ச் எல்இடி அல்ட்ரா எச்டி (4கே) டிவி - ரூ.19,999
ப்ளாபங்க்ட் 43-இன்ச் சைபர்சவுண்ட் ஸ்மார்ட் டிவி - ரூ. 19,999
இன்பினிக்ஸ் 43-இன்ச் எக்ஸ்3 எல்இடி ஸ்மார்ட் டிவி - ரூ. 19,999
வு 43-இன்ச் எல்இடி அல்ட்ரா எச்டி (4கே) டிவி - ரூ. 19,378
சான்யோ 43-இன்ச் எல்இடி ஃபுல் எச்டி டிவி - ரூ. 19,999

Photo Courtesy: Flipkart

Best Mobiles in India

English summary
Looking for 43 inch 4K TV To Buy In This Diwali 2022 Check This New Compaq TV Price Under Rs 20000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X