Home
Gadgets

பட்ஜெட் விலையில் Xiaomi இன் 32-ஸ்மார்ட் டிவி வாங்க விருப்பமா? 1 இல்ல 4 ஆப்ஷன் இருக்கு: வாங்க பார்ப்போம்.!

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்கின்றன. 55-இன்ச், 43-இன்ச் டிவிகளை விட 32-இன்ச் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே நிறுவனங்கள் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை தான் அதிகமாக அறிமுகம் செய்கின்றன.

குறிப்பாக இந்தியாவில் சாம்சங், எல்ஜி, ஒன்பிளஸ், டிசிஎல் ஆகிய நிறுவனங்களை விட சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால், பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது சியோமி நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த சியோமி 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளைப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவிகள்.!

1.எம்ஐ 32-இன்ச் 5ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி

சியோமி நிறுவனத்தின் எம்ஐ 32-இன்ச் 5ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம்.

எம்ஐ 32-இன்ச் 5ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவியின் ஆடியோ வசதி எப்படி?

டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி. எனவே இதன் மூலம் தெளிவான ஆடியோவை நாம் பெற முடியும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், குவாட்-கோர்ட கார்டெக்ஸ் ஏ35 பிராசஸர், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த எம்ஐ 32-இன்ச் 5ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி மாடல்.

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவிகள்.!

எம்ஐ 32-இன்ச் Horizon Edition எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 4ஏ
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 32-இன்ச் Horizon Edition எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 4ஏ மாடலுக்கு இப்போது கூட நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க கிடைக்கிறது. பின்பு டிடிஎஸ்-எச்டி ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

எம்ஐ 32-இன்ச் Horizon Edition எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 4ஏ பிராசஸர்?

எம்ஐ 32-இன்ச் Horizon Edition எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 4ஏ ஆனது குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இதில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, குரோம்காஸ்ட் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளம், புளூடூத் 4.1, வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவிகள்.!

3.எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ

சியோமி நிறுவனத்தின் எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ மாடல் ஆனது ரூ.16,499-க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி டால்பி + டிடிஎஸ்-எச்டி ஆதரவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்களை கொண்டுள்ளது. எனவே இதன் மூலம் நமக்கு ஒரு தியேட்டர் தர அனுபவம் கிடைக்கும்.

எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ இயங்குதளம்

எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு பேட்ச்வால் 3.0 ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் வசதி, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவு கொண்டுள்ளது இந்த எம்ஐ ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியில் Data Saver ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவிகள்.!

4.எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ

எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.16,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ மாடல்.

எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ ஸ்டோரேஜ்

சியோமி எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ மாடலில் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். பின்பு குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர், டால்பி ஆடியோவுடன் கூடிய 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகளுடன் இந்த எம்ஐ 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி 5ஏ ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking for 32-inch Smart TV from Xiaomi? Here is the list of top 4 smart TVs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X