Home
Gadgets

இதை விட கம்மி விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கிடைக்க வாய்ப்பில்ல ராஜா: மிஸ் பண்ணாதீங்க.!

இந்தியாவில் 55-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே சியோமி, ஒன்பிளஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. காரணம் என்னவென்றால் கம்மி விலையில் தரமான அம்சங்களை கொண்ட டிவிகளை அறிமுகம் செய்கிறது சியோமி. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், இந்தியாவில் குறைந்த விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

குறைந்த விலையில் வாங்கச் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல்.!

32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி: சமீபத்தில் ரெட்மி நிறுவனம் 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் டிவி வரும் மார்ச் 21-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதுவும் வங்கி சலுகையுடன் இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடலை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். Fire OS 7மூலம் இயங்குகிறது இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் Fire டிவி மாடல்.

ரெட்மி டிவி அம்சங்கள்: பிரைம் வீடியோ, அமேசான் மியூசிக், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி போன்ற பிரபலமான ஆப் பயன்பாடுகள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை Fire OS ஆதரிக்கிறது. மேலும் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ப்ளூடூத் 5, டூயல்-பேண்ட் வைஃபை, ஏர்பிளே மற்றும் மிராகாஸ்ட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போர்ட்,3.5mm socket உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ரெட்மி டிவி.

32-இன்ச் ஒன்பிளஸ் Y Series ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: அமேசான் தளத்தில் இந்த 32-இன்ச் ஒன்பிளஸ் Y Series ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல் ரூ.14,999-விலையில் கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

ஒன்பிளஸ் டிவி அம்சங்கள்: இந்த 32-இன்ச் ஒன்பிளஸ் Y Series ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ ஆதரவு,கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது.

குறைந்த விலையில் வாங்கச் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல்.!

32-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: இந்த தாம்சன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

32-இன்ச் எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஸ் டிவி: இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க கிடைக்கிறது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக குவாட்-கோர் பிராசஸர், டால்பி ஆடியோ ஆதரவு, 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 1ஜிபி ரேம், 4ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த எல்ஜி டிவி.

குறைந்த விலையில் வாங்கச் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல்.!

32-இன்ச் ஏசர் எஸ்-சீரிஸ் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி: இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 40 வாட்ஸ் சவுண்ட்பார் ஆதரவு, டால்பி ஆடியோ ஆதரவு, 1.5ஜிபி ரேம், 64-பிட் குவாட்-கோர் பிராசஸர், 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், எச்டிஆர் ஆதரவு, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், வைஃபை ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
List of Best 32-inch Smart TVs to Buy at Low Prices: Buying guide : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X