Home
Gadgets

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. 150 இன்ச்.. ஆண்ட்ராய்டு OS.. நம்ப முடியாத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4கே ப்ரொஜெக்டர் ஒன்றும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் (Lifelong Electronics ROAR Projector) மாடலுக்கு 67 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8347 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை ரூ.7,347 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. நம்ப முடியாத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்..

லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Lifelong Electronics ROAR Projector Specifications): 720pஎச்டி ரெசல்யூஷன் மற்றும் 1080p ஃபுல் எச்டி மற்றும் 4கே ரெசல்யூஷன் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இது ஒரு எல்இடி ப்ரொஜெக்டர் ஆகும். அதுவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Lifelong நிறுவனம்.

குறிப்பாக லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடல் ஆனது 3840 × 2160 பிக்சலஸ், 4000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடல் மூலம் 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) போன்ற பல்வேறு ஓடிடி ஆப்களை இதில் பயன்படுத்த முடியும்.

அதேபோல் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), Manual போகஸ், டூயல் வயர்லெஸ் மைக்ரோபோன்கள் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. அதேபோல் மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம்.

இந்த லைஃப்லாங் புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ்,மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ, யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. நம்ப முடியாத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்..

இந்த சாதனத்தில் பிலட் இன் 20W ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் இதில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1000 கிராம் எடை கொண்டுள்ளது லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் ROAR ப்ரொஜெக்டர் மாடல்.

Best Mobiles in India

English summary
Lifelong Electronics ROAR Projector available at discounted price during Amazon Prime Day sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X