Home
Gadgets

எல்ஜி XBOOM WK9 சாதனம் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

எனவே நீங்கள் குரல் கொடுத்தால் போதும் ஆடியோ, வீடியோ என அனைத்தையும் இயக்க முடியும். குறிப்பாக செய்திகளை கூட இவற்றில் தெரிந்துகொள்ள முடியும்.

இந்திய சந்தையில் அமேசான் எக்கோ, லெனோவோ ஸ்மார்ட் டிஸ்பிளே, கூகுள் ஹோம் ஹப், பேஸ்புக் போர்டல் போன்ற பல சாதனங்கள் அதிக வரவேறப்பை பெற்றுள்ளது என்று தான் சொல்லவேண்டும், தற்சமயம் இந்த சாதனங்களுக்கு
போட்டியாக எல்ஜி நிறுவனம் XBOOM WK9 AI ThinQ ஸ்மார்ட் டிஸ்பிளே சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த எல்ஜி ஏஐ-ஸ்மார்ட் டிஸ்பிளே சாதனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு பக்கங்களிலும் ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி XBOOM WK9 சாதனம்:

எல்ஜி XBOOM WK9 சாதனம்:

எல்ஜி XBOOM WK9 சாதனம் பொறுத்தவரை ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் வெளிவந்துள்ளது, எனவே நீங்கள் குரல் கொடுத்தால் போதும் ஆடியோ, வீடியோ என அனைத்தையும் இயக்க முடியும். குறிப்பாக செய்திகளை கூட இவற்றில் தெரிந்துகொள்ள முடியும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எல்ஜி XBOOM WK9 சாதனத்தில் 8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 1200 x 800 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தின் முன்புறம் 5எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு கூகுள் டூயோ வீடியோ கால் அழைப்புகள் போன்றவற்றிக்கு இவற்றை பயன்படுத்த முடியும். மேலும் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த சாதனம்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

எல்ஜி XBOOM WK9 சாதனம் இரண்டு 20-வாட் ஸ்பீக்கர், மெரிடியனின் பாஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜி மூலம் இயக்கப்படுகிறது. ஒரு அறையில் எங்கிருந்தும் இவற்றை இயக்க முடியும். பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும்
சிறந்த மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது.

வைஃபை நெட்வொர்க்

வைஃபை நெட்வொர்க்

வைஃபை நெட்வொர்க் மற்றும் கூகுள் கணக்கு போன்றவற்றின் மூலம் இந்த சாதனத்தை அனைத்து இடங்களிலும்
பயன்படுத்த முடியும். பின்பு YouTube, YouTube TV, HBO, CBS, CW மற்றும் Wiki ஆகியவற்றிலிருந்து வீடியோக்களை இயக்கலாம். Google Play Music, Spotify, YouTube Music, Pandora, TuneIn மற்றும் Deezer போன்ற ஆடியோ சேவைகள் இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே மூலம் அணுகலாம்.

விலை:

விலை:

மற்ற சாதனங்களை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த எல்ஜி XBOOM WK9 சாதனம் வெளிவந்துள்ளது, மேலும் ரூ.14,200 விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
LG XBOOM WK9 AI ThinQ Smart Display announced with 8-inch screen, dual 20W speakers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X