ஒட்டிக்கோ.! கட்டிக்கோ.! இது வேட்டியல்ல எல்ஜியின் 77இன்ச் டிவி.!
இந்த டிவியை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஒட்டியும் கொள்ளலாம். அல்லது மடிக்கியும் கொள்ளலாம். ஆனால் டிவிக்கு எந்த ஒரு பிரச்னையும் ஆகாது. தெளிவாக காட்சியை பார்க்க முடியும்.
ஒட்டிக்கோ கட்டிக்கோ என்றால் நமக்கு ஞாபகம் வருது ஒரு பிரபலமான வேஸ்டி விளம்பரம் தான். இந்த வேட்டியை போல உங்கள் டிவியை நீங்கள் சுவற்றில் தேவைப்படும் போது எடுத்துக் ஒட்டிக் கொள்ள முடியும்.

தேவைப்படாத போது, அதை கட்டி வைத்துக் கொள்ளவும் முடியும். திரை இன்ச் 77. இம்மா பெரிய டிவியை பார்த்ததை விட அதில் உள்ள சிறப்புகள் தான் நம்மை அதிரவைக்க விடுகின்றது.
இந்த டிவியை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் ஒட்டியும் கொள்ளலாம். அல்லது மடிக்கியும் கொள்ளலாம். ஆனால் டிவிக்கு எந்த ஒரு பிரச்னையும் ஆகாது. தெளிவாக காட்சியை பார்க்க முடியும்.

எல்ஜி நிறுவனம்:
எல்ஜி நிறுவனம் பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில், இந்த நிறுவனம் ஓஎல்டி டிவிகளை தயாரிப்பில் முன்னணியாகவும், தனி கவனம் செலுத்தி வருகின்றது.
இதில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களும் அடங்கியுள்ளன.
பேப்பரை போன்று திரை:
எல்ஜி நிறுவனம் புதிதாக ஓஎல்இடியில் 4 கே தொழில் நுட்பத்தில் புதிய திரையை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் மெல்லிய திரையை போன்று இருக்கின்றது. மேலும் தெளிவாக காட்சியை காண முடியும்.

சுவற்றில் ஒட்டிக் கொள்ள முடியும்:
எல்ஜி நிறுவனத்தின் இந்த ஓஎல்இடி டிவி ஆனது சிஎஸ்இ தொழில் நுட்பத்தில் வந்துள்ளது. இது எல்ஜியின் வால்பேப்பர் தின் டபில்யூ சீரியஸ் ஆகும்.
இதை பிளாஸ்டிக் அட்டையை போன்று மெல்லிய திரையை உடையது.
இதை நாம் சுற்றில் தேவைப்படும் போது ஒட்டிக் கொள்ள முடியும். தேவைப்படாத போது, கழட்டியும் வைத்துக் கொள்ள முடியும்.

திரை அம்சம்:
65 இன்ச் மற்றும் 77 இன்ச் இரண்டு மாடல்களையும் எல்ஜி நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

கிடைக்கும் விலை:
65 இன் டிவி $7,999 (ரூ. 5,71,288 ). 77 இன்ச் டிவி $19,999 (ரூ. 14,28,328) விற்பனை சீனாவில் செய்யப்படுகின்றது.

திரை அம்சம்:
0.2 இன்ச் டிவி தடிமன் உடையது திரை. ஹெச்டிஎம்ஐ தொழில்நுட்பம், டால்பி அட்மோஸ் ஒலி உள்ளிட்டவையும். வேவ் ஓஎஸ் 3.5 உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆன்லைனில் வாங்கி கொள்ளவும் முடியும்:
இந்த டிவியை ஆன்லைனில் நாம் ஆடர் செய்து சீனாவில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். இதை ஏராளமானோர். இந்த டிவிக்கு ஏராளமானோர் வரவேற்று தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு எல்ஜியின் வலைதளத்திற்கு செல்லவும்.


Click it and Unblock the Notifications