LG அல்ட்ராகியர் 27GN950 மானிட்டர் விற்பனைக்கு அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
எல்ஜி நிறுவனம் தனது அல்ட்ராகியர்(UltraGear) சீரிஸின் கீழ் புதிய 27' இன்ச் கேமிங் மானிட்டரை (27GN950) இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஜி அல்ட்ராகியர் 27GN950 மானிட்டர் 4K UHD தீர்மானம், 144 ஹெர்ட்ஸ் ரெஃபிரெஷ்ஷிங் ரேட், VESA டிஸ்பிளே HDR600 தொழில்நுட்ப்பதுடன் இன்னும் பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி 27GN950 அல்ட்ராகியர் மானிட்டர் அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இருந்து விற்பனைக்கு கிடைக்கும் என்று LG நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய எல்ஜி அல்ட்ராகியர் 27GN950 மானிட்டர் ரூ .59,999 என்ற விலையில் இந்திய சந்தையில் இப்பொழுது விற்பனைக்கு கிடைக்கிறது.
எல்ஜி அல்ட்ராகியர் 27GN950 மானிட்டரின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
- 27' இன்ச் கொண்ட 16: 9 விகிதம் மற்றும் 3840 × 2160 பிக்சல் உடைய 4K UHD டிஸ்பிளே
- VESA டிஸ்பிளே ஸ்ட்ரீம் கம்ப்ரெஷன் (DSC) தொழில்நுட்பம்
- நானோ ஐபிஎஸ் தொழில்நுட்பம்
- VESA டிஸ்பிளே HDR600 சான்றிதழுடன்
- கலர் அக்யுரசி, டைனமிக் கான்ட்ராஸ்ட், உயர் ஒளிர்வு
- வைடு கலர் காமட்
- NVIDIA G-SYNC HDR இணக்கம் மற்றும் ஆதரவு
- 2x HDMI போர்ட்கள்
- 1 டிஸ்பிளே போர்ட்
- 1 யூ.எஸ்.பி அப்ஸ்ட்ரீம் போர்ட்
- 2x யூ.எஸ்.பி டௌன்ஸ்ட்ரீம் போர்ட்


Click it and Unblock the Notifications