கூகுள் ஹோம் மற்றும் அமேசான் ஈசோவுக்கு சவால்விடும் LG திங்க்யூ WK7.!

|

கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் இயங்கும் LG XBOOM WK7 ஸ்மார்ட் ஸ்பீக்கர், அமேசான் அலெக்ஸா மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் கூகுள் ஹோம் ஆகியவை உடன் நேரடியாக போட்டியிடும் திறனை பெற்றுள்ளது.

கூகுள் ஹோம் மற்றும் அமேசான் ஈசோவுக்கு சவால்விடும் LG திங்க்யூ WK7.!

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் கொண்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை, ஆப்பிள், கூகுள், சாம்சங் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமேசான் அலெக்ஸா மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் கூகுள் ஹோம் ஆகியவை உடன் கூகுள் அசிஸ்டெண்ட் உதவியுடன் இயங்கும் LG XBOOM WK7 ஸ்மார்ட் ஸ்பீக்கர் நேருக்கு நேராக போட்டியிட வந்துவிட்டது. அதன் சிறப்புகளை குறித்த ஒரு கண்ணோட்டத்தை காண்போம்.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

நமக்கு பழக்கமான கோள வடிவத்தில் LG WK7 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டாண்டாலோன் ஸ்பீக்கரின் அளவு 135 x 210.7 x 135 mm இருப்பதோடு, கிரில் மூலம் பொதியப்பட்டுள்ளது. இந்த குவிந்த அமைப்பு மட்டும் சற்று உறுத்துகிறது. கூகுள் ஹோம் மற்றும் அமேசான் ஈச்சோ ஆகியவற்றை ஒப்பிட்டால், உயரமாகவும் பெரியதாகவும் உள்ளது.

இதன் பின்புற பேனலின் மேற்பக்க முனையில் ஒரே ஒரு கீ மட்டுமே காணப்படுகிறது. "F" கீ மற்றும் ஒலி அளவு ப்ளேபேக் உள்ளிட்ட மற்ற எல்லா கன்ட்ரோல்களும் தொடு திறனில் இயங்கும் கன்ட்ரோலர்களாக மேற்பகுதியில் உள்ளன. வண்ண மையமான கூகுள் அசிஸ்டெண்ட் லோகோ ஒன்று மேற்பகுதியில் காணப்படுகிறது. அதன்மூலம் ஹே கூகுள் என்று செல்வதை தவிர்க்கலாம். "F" கீ மூலம் வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்புகளை இணைக்கலாம். ஸ்பீக்கரின் கீழே சார்ஜிங் செய்யும் போர்ட் மற்றும் ரீசெட் கீ ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, ஸ்பீக்கர் வடிவமைப்பில் LG நிறுவனம் சிறப்பாக பணியாற்றி உள்ளது.

அம்சங்கள்:

அம்சங்கள்:

"தெளிவான வோக்கல்" ஆடியோ அம்சத்தை இந்த ஸ்பீக்கர் பெற்றிருப்பதால், இணைக்கப்பட்டிருக்கும் எந்தொரு ஆடியோ வெளியீட்டிலும் தெளிவான வோக்கலை பெற முடிகிறது. அதிகபட்ச ஒலி அளவில் வைத்தால் கூட, இந்த ஸ்பீக்கர்கள் தெளிவான சத்தமான வெளியீட்டை அளிக்கிறது.

AI பின்பலத்தை கொண்ட XBOOM WK7, கூகுளின் ஆண்ட்ராய்டு பொருட்கள் தளத்தின் கீழ் LG நிறுவனம் வெளியிடும் முதல் ஸ்பீக்கர் ஆகும். எனவே எந்தொரு தகவலை பெறவோ அல்லது செயலை செய்யவோ "ஹே கூகுள்" என்று கூறினால் போதும்.

மேலும் இதில் க்ரோம்காஸ்ட் செயல்படுத்தப்பட்டுள்ளதால், கூகுள் அடிப்படையிலான மல்டி-ரூம் ஆடியோ சிஸ்டத்தை, வாய்மொழியில் இயக்கி கட்டுப்படுத்த முடியும். கூகுள் ப்ளே மியூஸிக் மற்றும் ஸ்வான் உள்ளிட்ட

ஆடியோ செயல்பாடு:

ஆடியோ செயல்பாடு:

அதிகபட்சமாக 30W உள்ளீடு அலகு வரை தகுந்த செயல்பாட்டை அளிக்கிறது. இதனால் இதில் ஆழமான பாஸ் கொண்ட ஒரு பிரிமியம் ஒலி தரத்தை பெற முடிகிறது. ஆடியோ வெளியீடு உயர்தர பகுப்பாய்வு கொண்டதாகவும் அதிக ஒலி அளவுகளில் சிதறாமலும் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர் மூலம் 24-பைட் /96KHz ப்ளேபேக் ஆடியோவை பெறலாம். எனவே இதன்மூலம் சத்தமான ஆனால் தெளிவான ஆடியோவை பெறலாம் என்பது உறுதியாகிறது.

இந்நிலையில் கூகுள் ஹோம் மற்றும் அமேசான் ஈச்சோ ஆடியோ வெளியீட்டில் நீங்கள் திருப்தி அடையவில்லை எனில், AI திறன் கொண்ட LG XBOOM WK7 ஸ்பீக்கர் சிறந்த தேர்வாக அமையும்.

இது தவிர, PK சீரிஸில் அமைந்த ஸ்பீக்கர்களையும் LG நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. PK3, PK5 மற்றும் PK7 ஆகியவை இந்த வரிசையில் உள்ளன. இரட்டை நேர்முக ரேடியேட்டர்கள் உடன் கூடிய இந்த ஸ்பீக்கர்கள் மூலம் உயர்தர ஆடியோவை பெற முடிவதோடு, இன்ஹான்ஸ்டு பாஸ் மோடு மூலம் அடிக்கும் தன்மையிலான பாஸ் அனுபவத்தை பெறலாம்.

இந்த PK சீரிஸ் ஸ்பீக்கர்களுடன் வாய்ஸ் கமெண்டு அம்சத்தையும் பெறலாம். இதற்கு அதில் உள்ள ஒரு பொத்தானை மட்டும் அழுத்தினால் போதுமானது.

இந்த ஸ்பீக்கர்களில் உள்ள உள்கட்டமைப்பு LED லைட், இசைக்கும் இசையின் தாளத்திற்கு ஏற்ப ஏற்ற இறக்க ஒலி காட்சியமைப்பை அளிக்கிறது. இதில் அளிக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு பேட்டரிகள் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும்.

விலை:

விலை:

LG XBOOM WK7 பொறுத்த வரை ரூ.27,990 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PK சீரிஸ் உள்ள PK3-க்கு ரூ.10,990 என்றும் PK5-க்கு ரூ.14,990 என்றும் PK7-க்கு ரூ.22,990 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முடிவு:

முடிவு:

LG XBOOM WK7 இல் சில மதிப்பு மிகுந்த அம்சங்கள் கொண்டிருந்தாலும், விலை சற்று அதிகமாக இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. கூகுகள் ஹோம் மற்றும் அமேசான் அலெக்ஸா போன்றவற்றை ரூ.10 ஆயிரத்திற்கு கீழ் வாங்க முடிகிறது. அதே நேரத்தில் சிறந்த ஆடியோ மற்றும் கச்சிதமான செயல்பாடு ஆகியவற்றை நீங்கள் எதிர்பார்த்தால், இந்த சாதனம் தகுந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
LG ThinQ WK7 AI speaker first impressions: Powerful alternative for Google Home and Amazon Echo : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X