Home
Gadgets

LG அறிமுகம் செய்த டிரான்ஸ்பரண்ட் டிவி.. டால்பி அட்மாஸ், ஒஎல்இடி 4K டிஸ்பிளே.. தலை சுற்ற வைக்கும் விலை!

எல்ஜி (LG) நிறுவனம் எப்போதுமே தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் எல்ஜி நிறுவனம் ஒரு தனித்துவமான எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டி டிரான்ஸ்பரண்ட் டிவி (LG Signature OLED T transparent TV) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டி டிரான்ஸ்பரண்ட் டிவி அம்சங்கள் (LG Signature OLED T transparent TV specifications): ஸ்டாண்ட் இல்லாமல், இந்த டிவியின் எடை 60 கிலோ ஆகும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ள எல்ஜி நிறுவனம். குறிப்பாக எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டி டிவி மாடல் 77-இன்ச் 4K ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு டிரான்ஸ்பரண்ட் வடிவமைப்புடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

LG அறிமுகம் செய்த டிரான்ஸ்பரண்ட் டிவி.. தலை சுற்ற வைக்கும் விலை!

அதேபோல் 3,840 x 2,160 பிக்சல்ஸ், 120Hz நேட்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), 4K AI சூப்பர் அப்ஸ்கேலிங் (4K AI super upscaling) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டி டிரான்ஸ்பரண்ட் டிவி மாடல். இதுதவிர பல்வேறு டிஸ்பிளே அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), அடாப்டிவ் சின்க், 4K120Hz கேம்ப்ளே உள்ளிட்ட பல்வேறு கேமிங் அம்சங்களுடன் இந்த எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டி டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவி மாடலை நம்பி வாங்கலாம்.

ஆல்வேஸ் ஆன்-டிஸ்பிளே (Always-On-Display mode), பிக்சர்ஸ், ஆர்ட் கேலரி,டி-ஹோம் (T-Home), டி-பார் (T-bar) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் டி-பார் (T-bar) உதவியுடன் நோட்டிபிகேஷன், விளையாட்டு அப்டேட்கள், வானிலை தகவல் போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X), ஏஐ என்ஹான்ஸ்மெண்ட் (AI enhancements) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் 4.2 சேனல் ஸ்பீக்கர் ஆதரவும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டி டிரான்ஸ்பரண்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

LG அறிமுகம் செய்த டிரான்ஸ்பரண்ட் டிவி.. தலை சுற்ற வைக்கும் விலை!

எல்ஜியின் ஆல்பா 11 பிராசஸர் (Alpha 11 processor) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவி மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புளூடூத் 5.1, யுஎஸ்பி 2.0, வைஃபை 6இ, ஈதர்நெட், I/O போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டி மாடலில் உள்ளன.

ஆனால் எல்ஜி சிக்னேச்சர் ஒஎல்இடி டி டிரான்ஸ்பரண்ட் டிவி மாடல் ஆனது தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவியின் விலை $60,000 (இந்திய மதிப்பில் ரூ.51,10,800) ஆக உள்ளது. விரைவில் இந்த டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG Signature OLED T transparent TV launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X