Home
Gadgets

சுருட்டி வைத்துக்கொள்ளும் புதிய ஸமார்ட் டிவியை அறிமுகம் செய்யும் எல்ஜி.!

எல்ஜி நிறுவனமும் மடிக்கும் ஸ்மார்ட்போனை 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளிவந்துள்ளது.

எல்ஜி நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அந்த வகையில் 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்ஜி நிறுவனம் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சுருட்டி வைத்துக்கொள்ளும் புதிய ஸமார்ட் டிவியை அறிமுகம் செய்யும் எல்ஜி

மேலும் இந்த டிவி மாடல் ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்பங்களுடன் வெளிவரும் என எல்ஜி நிறுவனம் சார்பாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பின்பு சாம்சங் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள மடிக்கும் ஸ்மார்ட்போனை போல் எல்ஜி நிறுவனமும் மடிக்கும் ஸ்மார்ட்போனை 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம்
செய்யும் என தகவல் வெளிவந்துள்ளது.

 ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்

ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்

இதற்குமுன்பு ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம். குறிப்பாக சியோமி அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக எல்ஜி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.

 45-இன்ச் டிஸ்பிளே முதல் 77-இன்ச் டிஸ்பிளே வரை

45-இன்ச் டிஸ்பிளே முதல் 77-இன்ச் டிஸ்பிளே வரை

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 45-இன்ச் டிஸ்பிளே முதல் 77-இன்ச் டிஸ்பிளே வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று எல்ஜி நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகத்துல்லியமான ஒலி

மிகத்துல்லியமான ஒலி

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவி மாடல்கள் மிகத்துல்லியமான ஒலி அமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளன, பின்பு ஒல்எல்இடி, சூப்பர் யுஎச்டி, மற்றும் யுஎச்டி ஸ்மார்ட் டிவி என பல்வேறு மாடல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 25 வகையான தொலைக்காட்சிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 4கே ஜாஸ் என்ற தொலைக்காட்சியையும் அறிமுகம் செய்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்பம்

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவிகளின் மிகச் சிற்பான அம்சம் என்னவென்றால், இவற்றில் ஏஐ தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது எனவே நமக்கு வேண்டியவற்றை வாய்ஸ் கமாண்டின் மூலம் சில நொடிகளில் இந்த ஸ்மார்ட் டிவிகள் தந்துவிடுகின்றன.

 ஆரம்ப விலை

ஆரம்ப விலை

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எல்ஜி ஓஎல்இடி ஸ்மார்ட் டிவிகளின் ஆரம்ப விலை ரூ.2.5 லட்சம் எனவும், பின்பு யுஎச்டி ஸ்மார்ட் டிவிகளின் ஆரம்ப விலை ரூ.65,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG said to introduce new rollable OLED TV at the CES 2019: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X