Home
Gadgets

ஆரம்பமே ரூ.3.5 லட்சம்.. எல்லாமே வயர்லெஸ்.. அடிச்சு சொல்லலாம் மினி தியேட்டர்னு.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இதென்ன டிவியா? இல்ல மினி தியேட்டரா? என்று கேட்கும்படி ஆரம்ப விலையே ரூ.3,51,413 பட்ஜெட்டில் இருக்கும்படி வெளியாகி இருக்கிறது எல்ஜி ஓஎல்இடி ஈவோ எம்4 டிவி (LG OLED evo M4 TV). வயர்லெஸ் ஆடியோ, வீடியோ சப்போர்ட் கொடுக்கும் ஜீரோ கனெக்ட் பாக்ஸ் (Zero Connect Box) உடன் வெளியாகி இருக்கும் இந்த எல்ஜி டிவியில் ஓஎல்இடி டிஸ்பிளே, டால்பி விஷன், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் வருகின்றன. இதுகுறித்த விவரம் இதோ.

இந்த எல்ஜி டிவியின் விலைக்கு ஜீரோ கனெக்ட் பாக்ஸ் முக்கியமாக இருக்கிறது. இந்த பாக்ஸ் மூலம் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4K ரெசொலூஷன் கொண்ட வீடியோவை வயர்லெஸ் டிரான்ஸ்பர் செய்ய முடியும். அதேபோல ஆடியோவையும் வயர்லெஸ் டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். இந்த பாக்ஸில் மட்டுமே கனெ்டிவிட்டி பீச்சர்கள் வரும். ஆகவே, டிவியை முற்றிலும் வயர்லெஸாக இயக்கலாம்.

ஆரம்பமே ரூ.3.5 லட்சம்.. எல்லாமே வயர்லெஸ்.. ரியல் மினி தியேட்டர்!

எல்ஜி ஓஎல்இடி ஈவோ எம்4 டிவி அம்சங்கள் (LG OLED evo M4 TV Specifications): இந்த எல்ஜி டிவியில் 65 இன்ச், 77 இன்ச், 83 இன்ச் மற்றும் 97 இன்ச் டிஸ்பிளே மாடல்கள் வருகின்றன. இதுவொரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். 4K (3840 x 2160) ரெசொலூஷன் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், பிக்சல் டிம்மிங் (Pixel Dimming), ஓஎல்இடி மோஷன் (OLED Motion), ஓஎல்இடி டைனாமிக் டோன் மேப்பிங் ப்ரோ (OLED Dynamic Tone Mapping Pro) மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் (FILMMAKER MODE) வருகிறது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் உள்ளது.

ஆகவே, வீடியோ குவாலிட்டி அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம். இதுபோக சூப்பர் அப்ஸ்கேலிங் 4கே (Super Upscaling 4K), பிரைட்னஸ் கன்ட்ரோல் (Brightness Control), ஏஐ ஜென்ர் செலக்சன் (AI Genre Selection) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஆட்டோமேட்டிக் பிக்சர் மோட்கள் மற்றும் டிம்மிங் செய்து கொள்ளப்படும்.

ஆரம்பமே ரூ.3.5 லட்சம்.. எல்லாமே வயர்லெஸ்.. ரியல் மினி தியேட்டர்!

மேலும், விவிட், சினிமா, ஃபிலிம்மேக்கர், பிரைட் ரூம், டார்க் ரூம் போன்ற மோட்களும் வருகின்றன. இந்த எல்ஜி ஓஎல்இடி ஈவோ எம்4 டிவியில் வெப்ஓஎஸ் 24 (webOS 24), மேஜிக் ரிமோட் கன்ட்ரோல் (Magic Remote Control), எல்ஜி தின்கியூ ஆப் (LG ThinQ App) சப்போர்ட் வருகிறது. ஏ11 ஏஐ ப்ராஸசர் 4கே (A11 AI Processor 4K) வருகிறது.

கேமிங் பீச்சர்களை பார்க்கையில், ஜி-சிங்க் (G-Sync), ப்ரீசிங்க் (FreeSync), ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR) வருகிறது. மேலும், எச்ஜிஐசி மோட் (HGIG Mode) மற்றும் கேம் டாஸ்போர்ட் (Game Dashboard) வருகிறது. இந்த எல்ஜி ஓஎல்இடி ஈவோ எம்4 டிவியின் ஆடியோவை பார்க்கையில், 60W டவுன்ஃபயரிங் ஆடியோ அவுட்புட் வருகிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஏ11 ஏஐ சவுண்ட் ப்ரோ (A11 AI Sound Pro) சப்போர்ட் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), ஈதர்நெட் (Ethernet) மற்றும் ஆர்எப் (RF) வருகிறது.

65 இன்ச் ஆரம்ப மாடலின் விலை ரூ.3,51,413ஆக இருக்கிறது. அதேபோல 97 இன்ச் ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.23,43,638ஆகவும் இருக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆகவே, விரைவில் இந்திய மார்கெட்டுக்கு வரலாம். ஹை-எண்ட் ஸ்மார்ட்டிவி வேண்டும், பட்ஜெட் முக்கியமில்லை என்றால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X