மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு: எல்ஜி மொபைல் வாங்கினால் எல்இடி டிவி இலவசம்

|

புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக எல்ஜி நிறுவனம் அட்டகாச தள்ளுபடியை அறிவித்துள்ளது.

எல்ஜி நிறுவனம் ஜி 8 எக்ஸ் தின்க்யூ

எல்ஜி நிறுவனம் ஜி 8 எக்ஸ் தின்க்யூ

சமீபத்தில் எல்ஜி நிறுவனம் ஜி 8 எக்ஸ் தின்க்யூ மொபைல் போனை அறிமுகம் செய்தது. தற்போது புத்தாண்டு சலுகையாக ஜி 8 எக்ஸ் தின்க்யூ மொபைல் போன் வாங்குபவர்களுக்கு. 24 அங்குல எல்இடி டிவியை இலவசமாக வழங்குகிறது. இந்த இலவச அறிவிப்பானது ஜனவரி 15,2020 வரை மட்டுமே காலஅவகாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

இந்த வாய்ப்பைப் பெற, அமேசான் இந்தியா அல்லது ஆஃப்லைன் ஸ்டோரில் இந்த புதிய சலுகை நேரலையில் உள்ளது, இது ஜனவரி 15, 2020 வரை தொடரும். ஸ்மார்ட்போன் ஆன்லைனிலும் ஆஃப்லைன் கடைகளிலும் வாங்குவதற்கு இந்த சலுகை பொருந்தும். எல்ஜி ஜி 8 எக்ஸ் தின்க்யூவை போனை டிசம்பர் 25 முதல் 2020 ஜனவரி 15-க்குள் வாங்க வேண்டும்.

வீட்டிற்கே டிவி டெலிவரி:

வீட்டிற்கே டிவி டெலிவரி:

பின்னர் நீங்கள் படிவத்தை, எல்ஜியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிரப்ப வேண்டும். படிவத்தில் பெயர், முகவரி, தொடர்பு எண், IMEI எண், வரிசை எண் மற்றும் பல போன்ற அடிப்படை விவரங்கள் உள்ளன. எல்ஜி உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இலவச எல்இ.டி டிவியை வழங்கும். இது தவிர, ஜி 8 எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனை வாங்குவதில் ஒரு முறை இலவச டிஸ்பிளே மாற்றையும் நிறுவனம் வழங்குகிறது.

ஆஹா., பழையத் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்த ஏர்டெல்ஆஹா., பழையத் திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்த ஏர்டெல்

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் டிஸ்பிளே

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் டிஸ்பிளே

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 180 டிகிரி கோணங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

ஸ்னாப்டிராகன் 855

ஸ்னாப்டிராகன் 855

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

5 ஜி-யில் அடியெடுத்து வைத்த ஓப்போ: விலை மற்றும் அம்சங்கள்!5 ஜி-யில் அடியெடுத்து வைத்த ஓப்போ: விலை மற்றும் அம்சங்கள்!

 32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் என டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் விலை

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.

Source: themobileindian.com

Best Mobiles in India

English summary
LG offering a free 24-inch LG LED TV with LG G8X ThinQ mobile

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X