வீடு இல்ல, தெருவே அதிரும்.. LG இறக்கிய XBOOM ஸ்பீக்கர்கள்.. 15 Hrs பேட்டரி, 1000W அவுட்புட், IP67.. என்ன விலை?
15 மணிநேர வரையிலான பேட்டரி லைஃப், 1000W வரையிலான அவுட்புட், ஐபி67 வாட்டர் ப்ரூப் ரேட்டிங் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய 3 புதிய எல்ஜி ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எல்ஜி எக்ஸ்பூம் சீரீஸின் (LG XBOOM Series Speakers) கீழ் அறிமுகமாகி உள்ள இந்த 3 ஸ்பீக்கர்களின் விலை நிர்ணயம் என்ன? அம்சங்கள் என்ன? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் அதன் எல்ஜி எக்ஸ்பூம் சீரிஸின் கீழ் எக்ஸ்ஜி2டி (XG2T), எக்ஸ்எல்9டி (XL9T) மற்றும் எக்ஸ்ஓ2டி (XO2T) ஆகிய 3 புதிய ஸ்பீக்கர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி-யின் கூற்றுப்படி, இந்த புதிய சீரீஸ் ஆனது பெஸ்ட் சவுண்ட் குவாலிட்டி + மேம்படுத்தப்பட்ட போர்ட்டபிலிட்டி + லைட்டிங் அம்சங்களுடன் பயனர்களின் ஆடியோ அனுபவத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எல்ஜி எக்ஸ்பூம் சீரீஸ் ஸ்பீக்கர்களின் முக்கிய அம்சங்கள்: எல்ஜி எக்ஸ்பூம் எக்ஸ்எல்9டி ஸ்பீக்கர் ஆனது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சவுண்ட் எக்ஸ்பீரியன்ஸிற்காக உருவாக்கப்பட்ட பார்ட்டி ஸ்பீக்கராகும். 1000W அவுட்புட்டை வழங்கும் இந்த ஸ்பீக்கரில் டூயல் 8-இன்ச் வூஃபர்கள் மற்றும் 3-இன்ச் ட்வீட்டர்கள் உள்ளன. ஆழமான மற்றும் அதிர்வுறும் இசை அனுபவத்தை வழங்க, இந்த ஸ்பீக்கரில் பேஸ் என்ஹான்ஸ்மென்ட் அல்காரிதம் பொருத்தப்பட்டுள்ளது.
சுவாரசியமாக இது வூஃபர் லைட்ஸ் உடன் புதிய பிக்சல் எல்இடி லைட்டையும் கொண்டுள்ளது. இதில் டெக்ஸ்ட்,, எழுத்துகள் அல்லது ஈமோஜிகளை கஸ்டமைஸ் செய்து மிளிர விடலாம். மேலும் இது நீர் எதிர்ப்பு திறனுக்கான ஐபிஎக்ஸ்4 ரேடிங்கையும் (IPX4 Rating) கொண்டுள்ளது. ஒரு வசதியான கைப்பிடி மற்றும் உறுதியான சக்கரங்களை கொண்டுள்ள எக்ஸ்எல்9டி ஸ்பீக்கரை, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எளிமையாக கொண்டு செல்லலாம்.

அடுத்ததாக உள்ள எல்ஜி எக்ஸ்பூம் கோ எக்ஸ ஜி2டி (LG XBOOM GO XG2T) மாடல் ஆனது எளிமையாக எங்கும் எடுத்து செல்லக்கூடிய ஒரு சிறிய போர்ட்டபிள் ஸ்பீக்கர் ஆகும். 5W அவுட்புட்டை வழங்கும் இந்த ஸ்பீக்கரில் 1.5-இன்ச் வூஃபர் மற்றும் பேசிவ் ரேடியேட்டர் பொருத்தப்பட்டு உள்ளது.
ஐபி67 ரேட்டிங் மற்றும் யுஎஸ் மிலிட்டரி ஸ்டாண்டர்ட் டுயூரபிலிட்டி உடன் சில கடினமான சூழ்நிலைகளை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர் 10 மணிநேரம் வரையிலான பிளேபேக் டைம்-ஐ வழங்குகிறது. இதை பேக்பேக்குகள், சைக்கிள்கள், டென்ட்கள் மற்றும் பலவற்றில் எளிதாக இணைக்க அனுமதிக்கும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஸ்ட்ரிங்கும் உள்ளது. இதில் ப்ளூடூத் காலிங் வசதியும் உள்ளது.
கடைசியாக உள்ள எல்ஜி எக்ஸ்பூம் எக்ஸ்ஓ2டி மாடல் ஆனது மேம்படுத்தப்பட்ட பாஸ் மற்றும் கிளியர் வாய்ஸ் குவாலிட்டியை 360-டிகிரி ஓம்னி டைரக்ஷனலில் வழங்கும் ஒரு 20W ஸ்பீக்கர் ஆகும். இது மெழுகுவர்த்தி போன்ற ஒளியை பரப்பும், மனநிலையை மேம்படுத்தும் லைட்களை கொண்டுள்ளது.
மேலும் இது ஐபி55 நீர் எதிர்ப்புத்திறன், 15+ மணிநேர பேட்டரி லைஃப், ப்ளூடூத் 5.3, எல்ஜி ஒன் டச் மோட் மற்றும் மல்டி பாயிண்ட் ஷேரிங் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் எல்ஜி டிவியுடன் சினெர்ஜியை கொண்டுள்ளன. அதாவது இந்த ஸ்பீக்கர் ஃபிரண்ட் அல்லது ரியர் சரவுண்ட் செட்டிங்ஸ்கள் மற்றும் ஸ்டீரியோவிற்கு ஏற்ப பிளே ஆகும். இந்த ஸ்பீக்கரை வேறு பிராண்ட் டிவியுடனும் கூட இணைக்கலாம்.
இந்தியாவில் எக்ஸ்ஜி2டி, எக்ஸ்எல்9டி மற்றும் எக்ஸ்ஓ2டி ஸ்பீக்கர்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: எல்ஜி எக்ஸ்பூம்எக்ஸ்ஜி2டி ப்ளூடூத் ஸ்பீக்கரின் விலை ரூ.4,990 என்றும், எக்ஸ்ஓ2டி டேபிள் டாப் ஸ்பீக்கரின் விலை ரூ.12,990 என்றும் மற்றும் எக்ஸ்எல்9டி பார்ட்டி ஸ்பீக்கரின் விலை ரூ.64,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று ஸ்பீக்கர்களுமே நவம்பர் 15 முதல் எல்ஜி.காம் (LG.com) உட்பட இந்தியாவில் உள்ள ரீடெய்ல் மற்றும் ஆன்லைன் தளங்களின் வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications